அன்பரே, தேவனுடைய உதவியால், நீ தைரியமாகக் காரியங்களை செய்வாய்!
நீ தேவனைச் சார்ந்திருக்கும்போது, அசாதாரணமான காரியங்களைச் செய்யவும், புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் உன்னால் முடியும் என்று வேதாகமம் உறுதிப்படுத்துகிறது!
"தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்." (வேதாகமத்தில் சங்கீதம் 60:12ஐப் பார்க்கவும்)
"தைரியமாகக் காரியங்களைச் செய்வது" என்பது மூடுபனியில் அல்லது பனி மூடிய இடத்தில் வாகனம் ஓட்டுதல், பொதுஇடத்தில் பேசுதல், பயன்படுத்துவதற்குக் கடினமான இயந்திரத்தைப் பயன்படுத்துதல் என்பன போன்ற விஷயங்களாக இருக்கலாம். இது வெறும் வெற்றி பெறும் சாதனைகளை மட்டுமே உள்ளடக்கியதல்ல, பயனுள்ளதும் தேவையானதுமான விஷயங்களை செய்வதுமாகும். அவை ஒரேயொரு முறையோ அல்லது அனுதினமுமோ செய்யும் விஷயமாக இருக்கலாம். பெரும்பாலும் நாம் தைரியமான காரியங்களை செய்ய முயற்சிக்கத் துணிவதில்லை. ஏன்னென்றால் தோற்றுவிடுவோமோ என்ற பயம், அல்லது உணர்ச்சிவசப்படுதல், அல்லது நாமாகவே ஆபத்தான விளைவுகளை கற்பனை செய்துகொண்டு பயப்படுகிறோம்.
எனவே சில சமயங்களில், “என்றாவது ஒரு நாள் நான் அதைச் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டால் மட்டுமே தவிற நான் அதைச் செய்ய மாட்டேன்!” என்று நாம் நினைத்துக்கொள்கிறோம் அல்லது சொல்கிறோம்.
ஆயினும்கூட, அசாதாரணமானவற்றைச் செய்ய சாதாரண ஜனங்களைப் பயன்படுத்துவதில் தேவன் மகிழ்ச்சியடைகிறார். அவ்வாறு செய்வதன் மூலம், அநேகர் பார்க்கும் வகையில் அவர் தம்முடைய மகிமையை வெளிப்படுத்துகிறார். நீ அவருடைய மகிமையின் கருவியாய் இருக்கிறாய்!
அன்பரே, இன்று, நான் உனக்குச் சவால் விடுகிறேன்... முன்னேறிச் செல், முயற்சி செய்து பார்! உன்னைச் செயல்படத் தூண்டும் சூழ்நிலைகளுக்காக நீ ஏன் காத்திருக்க வேண்டும்? இன்றைக்கே "நன்மைக்கேதுவாக தைரியமாக காரியங்களைச் செய்"!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: "எனக்கு ஒரு புதிய வேலை கிடைத்துள்ளது... உங்களது பதிவுகளாலும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டதன் மூலமாகவும், நான் ஒரு அடி முன்னெடுத்து வைக்கவும், மிகவும் சவாலான வேலையை ஏற்றுக்கொள்ளவும் தைரியம் பெற்றிருக்கிறேன்." (ஹெலன்)
