வெளியீட்டு தேதி 29 ஜூன் 2023
அன்பரே, தேவன் உனக்காக வழக்காடுகிறார்
வெளியீட்டு தேதி 29 ஜூன் 2023
"என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்." (வேதாகமத்தில், யோபு 19:25)
நீ தவறாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாயா? நீ இப்போது நியாயமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறாயா?
தேவனுடனான உன் உறவில் இந்த விஷயங்கள் உன்னை அசைக்கவோ அல்லது தடுக்கவோ அனுமதிக்காதே.
விருப்பத்திற்கு மாறாக, அநீதி என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான்… இருப்பினும் தேவன் உன்னைப் பாதுகாப்பதையும், உனக்காக வழக்காடுபவரான இயேசு எழும்புவதையும் காண இது ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது!
- நெருக்கத்தில் உனக்கு சகாயராய் இருக்கிறார் (வேதாகமத்தில் சங்கீதம் 94:17 ஐப் பார்க்கவும்)
- புயலில் அவர் உன் கோட்டையாய் இருக்கிறார் (வேதாகமத்தில் சங்கீதம் 91:2 ஐப் பார்க்கவும்)
- அவர் உன்னைப் பாதுகாக்கும்படி எழுந்து நிற்கிறார் (வேதாகமத்தில் சங்கீதம் 68:5 ஐப் பார்க்கவும்)
- அவர் உன் வழக்கை நீதியாய் நியாயந்தீர்க்கிறார் (வேதாகமத்தில் நீதிமொழிகள் 31:9 ஐப் பார்க்கவும்)
அன்பரே, தம்முடைய வார்த்தையால் பிரபஞ்சத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறவர் உன் சூழ்நிலையைத் தமது வல்லமையான கரங்களில் வைத்திருக்கிறார் என்பதை உறுதியாக நம்பு!
