அன்பரே, தேவன் உனக்கு ஒரு பரிசு கொடுத்தால் எப்படி இருக்கும்?
அன்பரே, நீ என்னைப் போல் இருக்கிறாய் என்றால், நீ ஆச்சரியமூட்டும் நல்ல விஷயங்களை விரும்புகிறாய் என்று அர்த்தம். தேவன் நம்மை ஆச்சரியப்படுத்த விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா?
“நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை" (யாக்கோபு 1:17) என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
மிக அழகான வரங்கள் அனைத்தும் பரத்திலிருந்து வருகின்றன! மிக அற்புதம், இல்லையா?
நட்சத்திரங்களையும் வானங்களையும் படைத்த நமது பிதாவிடமிருந்து, அவர் உனக்காகத் திட்டமிட்டுள்ள அனைத்தையும் பெற்றுக்கொள்ள... அதாவது, நிறைவான வாழ்வு, மகிழ்ச்சி, பரத்திலிருந்து வரும் சத்துவம் மற்றும் அவர் உன் இருதயத்தில் வைத்திருக்கிறவைகளை நிறைவேற்றும் திறன் ஆகிய அனைத்தையும் நீ பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்!
கற்பனை செய்து பார்... நட்சத்திரங்களையும் வானங்களையும் படைத்தவர் உன் மீது தனிப்பட்ட முறையில் அக்கறையுள்ளவராய் இருக்கிறார், அன்பரே, உன்னை மென்மேலும் நிரப்பவும் அவருடைய நன்மையால் உன்னைத் திருப்திப்படுத்தவும் விரும்புகிறார். அவருடைய நாமம் துதிக்கப்படுவதாக மற்றும் மகிமைப்படுவதாக!
