• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 13 அக்டோபர் 2023

அன்பரே, தேவன் உன்னைத் தனிப்பட்ட முறையில் நேசிக்கிறார்!

வெளியீட்டு தேதி 13 அக்டோபர் 2023

தேவன் அன்பு நிறைந்தவர் என்றும், உன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் அவர் நேசிக்கிறார் என்றும் நீ ஏற்கனவே உறுதியாக நம்புகிறாய்.

ஆனால் அவர் உன்னையும் கூட, எல்லாவற்றையும்விட அதிகமாக நேசிக்கிறார் என்று நம்புகிறாயா நண்பனே/தோழியே? தேவன் என்னை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிக்கிறாரா என்று நான் சந்தேகப்பட்ட ஒரு காலகட்டம் என் வாழ்க்கையில் இருந்தது. அவருடைய அன்பைப் பெற வேண்டும் என்று நான் நினைத்தேன்.

“ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்." (வேதாகமத்தில் மத்தேயு 10:29-31ஐ வாசித்துப் பாருங்கள்) 

சிட்டுக்குருவிகளின் வாழ்வையும் மரணத்தையும் பற்றி தேவன் இவ்வளவு அக்கறையுள்ளவராய் இருக்கிறார், ஆனால் அதைவிட மேலாக... உன் தலையில் எத்தனை முடிகள் உள்ளன என்பதை அவர் அறிவார்!

  • உண்மையில், உன் எண்ணங்கள், உன் கனவுகள், உன் போராட்டங்கள் மற்றும் உன் வெற்றிகள் என உன்னைப் பற்றிய அனைத்தையும் அவர்  அறிந்திருக்கிறார்.
  • தேவன் ஒவ்வொரு நிமிடமும் உன்னுடன் இருக்கிறார். அவர் தொடர்ந்து உனக்கு அருகில் இருக்கிறார், உன்னை கவனித்துக்கொள்கிறார்.
  • அவர் ஒவ்வொரு நாளும் ஆயிரம் வெவ்வேறு வழிகளில் உன் மீதான தமது அன்பை வெளிப்படுத்துகிறார்.

தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார், அவர் உனக்காக, தனிப்பட்ட முறையில் தமது ஜீவனையே கொடுக்கும் அளவுக்குச் சென்றார்! அதுவே அவரை சத்தமாகத் துதிக்கத் தூண்டுகிறது அல்லவா?

என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஏறெடுப்பாயா ... “கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவர், மிகவும் அற்புதமானவர்! உமது அன்பு எனக்கு தினசரி பரிசும் ஆசீர்வாதமுமாக இருக்கிறது.  அது எனக்கு மிகுந்த பலத்தையும் தைரியத்தையும் தருகிறது. என் வாழ்க்கையில் நீர் செய்யும் எல்லாவற்றிற்காகவும் நன்றி.  தனிப்பட்ட முறையில் என்னை நேசித்ததற்கு நன்றி! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.