தேவன் எவ்விடங்களிலும் இருக்கிறார்!
இன்று காலை சூரிய உதயத்தின்போது பறவைகள் பாடுவதை நீ கேட்டாயா? அவைகளைச் சிருஷ்டித்தவர்தான் அவைகளைப் பாட வைக்கிறார்.
சூரியன் தன் படுக்கையாகிய வானத்திலிருந்து எழும்பி உதயமாவதைப் பார்த்தாயா? கர்த்தரே ஆகாயத்தில் அதன் போக்கை வழிநடத்துபவர்.
இலையுதிர்காலத்தில் விழுந்துகிடக்கும் காய்ந்துபோன இலை சறுகுகள் ஊடாக காற்று வீசுவதை நீ பார்த்திருக்கிறாயா? ஜீவனைப் படைத்தவரே இந்த காற்றை வீசச் செய்பவர்.
அன்பரே, நீ இன்று இதை வாசித்துக்கொண்டிருக்கிறாய் என்றால், நீ, உன் பரலோகப் பிதாவின் சித்தத்தின்படியே இன்று காலை எழுந்திருக்கிறாய் என்று நான் நினைக்கிறேன்!
என் நண்பனே/ தோழியே, உன் கண்களை ஏறெடுத்துப் பார், தேவன் தம்மைத் தரிசிக்க விரும்பும் எவருக்கும் எங்கும் காணப்படுகிறார். நித்திய காலமாக வாசம்பண்ணுகிற அவரைக் காண உனது விசுவாசத்தின் கண்களை நீ நிச்சயமாய்த் திறக்க வேண்டும். ஆண்டவர் தம்மை மறைக்கிறார், அதே நேரத்தில் தம்மை வெளிப்படுத்துகிறார். ஆண்டவர் "எல்லாவற்றிற்குள்ளும் இருக்கிறார், அனைத்தும் தேவனை மறைத்துக்கொண்டிருக்கிறது”, "கண்ணுக்குப் புலப்படாத ஒன்று உறுதியாய் இருக்கிறது", என்று விக்டர் ஹ்யூகோ எழுதியதுபோலவே ஆண்டவர் இருக்கிறார்.
அன்பரே, உன் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் ஆண்டவர் தம்மைப் பிரதிபலிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். ஆகவே எங்கும் வியாபித்திருக்கும் அவரை உன் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் காண்பதை ஒருக்காலும் நிறுத்தாதே!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “அனுதினமும் ஒரு அதிசயம்” மின்னஞ்சலானது நான் தளர்ந்துபோன வேளைகளில் எனக்கு நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது. நிறைய மன உளைச்சல் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருந்த வேளையில், ஆண்டவர் என்னுடன் இருக்கிறார், என் மீதான நம்பிக்கையை அவர் ஒருபோதும் கைவிடவில்லை, எனவே நான் அவர் மீதான என் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்பதை நீங்கள் எனக்கு நினைவூட்டியுள்ளீர்கள். அதற்காக நான் நன்றி தெரிவிக்கிறேன்." (சாமுவேல்)
