வெளியீட்டு தேதி 7 டிசம்பர் 2022

தேவன் ஏன் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார் என்பதை அறிவீர்களா?

வெளியீட்டு தேதி 7 டிசம்பர் 2022

தேவன் ஏன் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

சொல் அகராதியின் கூற்றுப்படி, வாக்குத்தத்தம் என்பது, "ஏதாவது செய்யப்படும் அல்லது செய்யப்படாது என்பதன் அறிவிப்பு" மற்றும் "எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்துதல்" ஆகும்.

மனுஷனுக்கு உறுதியளிப்பது மிகவும் அவசியம் என்பதை தேவன் அறிந்திருந்தார்: வேறுவிதமாகக் கூறவேண்டுமானால், அவன் எல்லா நேரத்திலும் அவர் மீது நம்பிக்கை வைக்கலாம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே ஆகும்.

வாக்குத்தத்தம் தேவனுக்குத் தேவையில்லை; மாறாக, மனுஷனுக்குத் தான் தேவை! தேவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை சரியானது, முறையானது, மேலும் அவர் மீதான நம்முடைய எதிர்பார்ப்பு ஒருபோதும் ஏமாற்றமடையாது என்ற உறுதி மனுஷர்களாகிய நமக்குத்தான் தேவை.

நீங்கள் தேவன் மீது நம்பிக்கை வைப்பது மிகவும் உகந்தது; ஏனென்றால், “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல”; “அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா?” (எண்ணாகமம் 23:19

எந்த நிலைமையிலும், தேவன் உங்களை மிகவும் நேசிக்கிறார் என்பதை அவர் உங்களுக்குக் காட்ட விரும்புகிறபடியால், அவர் தம்முடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகிறவராய் இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்.

தேவன் நிச்சயத்துடனும், உறுதியுடனும் உங்களுக்கு வாக்குப்பண்ண ஆயத்தமாக இருக்கிறார். ஏனெனில், நீங்கள் அவருடைய பார்வையில் மிகவும் விலையேறப்பெற்றவர்கள்.

இந்த வாரம் இனிதாக அமைய உங்களை வாழ்த்துகிறேன்! இந்த வாரம் முழுவதும், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உங்களுக்கானவைகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Eric Célérier
எழுத்தாளர்