• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
வெளியீட்டு தேதி 11 ஜனவரி 2025

தேவன் மிகவும் நல்லவர் 💛

வெளியீட்டு தேதி 11 ஜனவரி 2025

சில சமயங்களில் நமது குறுகிய மனுஷீக மனங்களால் ஆண்டவரைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம். நாம் அவரை ஒரு கண்டிப்பான ஆசிரியராகவோ, அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் பயிற்சியாளராகவோ அல்லது ஒரு கொடூரமான பெற்றோராகவோ கூட நினைக்கலாம், ஏனென்றால் நம் வாழ்வில் இத்தகைய நபர்களிடமிருந்து நமக்கு மோசமான அனுபவம் கிடைத்திருக்கலாம்.

உண்மை என்னவென்றால், உன்னை சிருஷ்டித்த ஆண்டவர் உன்னை மிகவும் நேசிக்கிறார். அவர் ஒரு நல்ல ஆண்டவர், அவர் தீமைக்கு ஏதுவான நினைவுகளை அல்ல, சமாதானத்துக்கு ஏதுவான நினைவுகளைக் கொண்டிருக்கிறார். அவருடைய தயவு உன் புரிந்துகொள்ளுதலைவிட  மேலானது.

ஆண்டவருடைய நன்மை, இரக்கம் மற்றும் தயவைப் பற்றி வேதாகமம் நம்மோடு பேசுகிறது:

  • “கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது."  (சங்கீதம் 36:5
  • "... உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது"  (சங்கீதம் 40:11)

இன்று, உன் வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்யவும், உன்னைக் குணப்படுத்தவும், ஒடுக்குமுறையிலிருந்து உன்னை விடுவிக்கவும், நம்பிக்கையைத் தந்து உன் குடும்பத்தை மீட்டெடுக்கவும் விரும்பும் ஆண்டவருடைய தயவின் மீது உன் விசுவாசத்தை வைக்க நான் உன்னை ஊக்குவிக்கிறேன். வாழ்க்கை கடினமாக இருக்கலாம் ஆனால் ஆண்டவர் நல்லவராகவே இருக்கிறார்.

“திருடன் (பிசாசு) திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10)

அன்பரே, உன் வாழ்வில் தாவீது சொன்ன வார்த்தைகளை அறிக்கையிட உன்னை அழைக்கிறேன்:

"என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்." (சங்கீதம் 23:6)

ஆண்டவருடைய நன்மையாகிய தயவை விவரிக்கும் எனக்கு பிடித்த பாடல் இதோ, அது உனக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் என்று நம்புகிறேன்!

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.