நாங்கள் உனக்கு எழுதும் முதல் அதிசயம்
ஆம்! 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலுக்காக நாங்கள் எழுதும் முதல் நாள் இறுதியாக வந்துவிட்டது! 🙌🏾
இந்தப் பயணத்தில் எங்களுடன் சேர்ந்து நீயும் பயணிப்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.
"'அனுதினமும் ஒரு அதிசயம்' என்றால் என்ன?" என்று நீ எப்போதாவது யோசித்திருக்கலாம். உன் விசுவாசத்தைப் பெலப்படுத்துவதற்கும் உனக்கு உதவுவதற்கும் நாங்கள் உனக்கு அனுப்பும் இந்த தினசரி மின்னஞ்சல்கள் ஒவ்வொன்றும் உனக்கு ஒரு 'அதிசயம்’ மற்றும் 'அற்புதம்’.
‘அதிசயம்’ என்ற வார்த்தையைப் பற்றி நீ நினைக்கும்போது, பொதுவாக ஒரு ஊக்கமளிக்கும் செய்தி என்பது மனதில் சட்டென தோன்றாது. வேதாகமத்தில் இயேசு செய்த குணப்படுத்தும் அற்புதங்களைப் போன்ற அதிசயமா ன ஒன்றை நீ கற்பனை செய்யலாம் (மத்தேயு 8:15) (லூக்கா 5:6) மற்றும் (மாற்கு 5:29) அல்லது யோவான் 6ம் அத்தியாயத்தில் உள்ள 5000 பேருக்கும் அதிகமானோரை போஷித்தல்: (யோவான் 6:1-14)
ஆம், இயேசுவின் அற்புதமான கிரியைகளுடன் ஒப்பிடும்போது, நமது மின்னஞ்சல்கள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்பது போலத் தோன்றலாம்; ஆனாலும், ஆண்டவர் அவற்றை வல்லமை வாய்ந்த ஆயுதமாகப் பயன்படுத்தி வருவது சாட்சிகளின் வாயிலாக நாம் அறிந்ததே. உண்மையில், 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலானது 2016ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் உள்ள அநேக மக்களுக்கு 23 வெவ்வேறு மொழிகளில் தினமும் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் எண்ணற்ற ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் உண்மையான ஆவிக்குரிய மாற்றத்தை அனுபவித்துள்ளனர்: அதற்கான சில சான்றுகளை இங்கே காணலாம்.
"'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலானது என் ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. நான் என் வேலையை இழந்தபோதும், என் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டபோதும், என் குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டபோதும், நான் சோர்ந்துபோய் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவனாக இருந்தேன் - ஆனால் 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சல் மூலம், நான் என் மனதளவில் ஆறுதலடைந்து, வாழ்க்கைச் சூழ்நிலைகளைத் தாங்கிக்கொள்ளவும் நம்பிக்கையுடன் கிறிஸ்துவுக்குள் வாழவும் கற்றுக்கொண்டேன்." - ராபர்ட், அறந்தாங்கி.
"எதையும் என் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் கூட, அதிகமாக நம்பிக்கைவைக்கவும், ஆண்டவரை அதிகமாக விசுவாசிக்கவும் இந்த மின்னஞ்சல்கள் எனக்கு உதவுகிறது. என்னைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என்ற போதும், நான் ஆண்டவருக்கு முக்கியமான ஒரு நபர் என்று நினைக்க இந்த மின்னஞ்சல்கள் எனக்கு உதவுகிறது. என் வாழ்க்கைக்கு மதிப்பு அளிக்க ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்த ஞானத்திற்காக நன்றி.” - மேனகா, நாகைப்பட்டினம்.
அன்பரே, ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலுக்கான புதிய ஆசிரியர்களாகவும் குரல்களாகவும் இருப்பதில் நாங்கள் உண்மையிலேயே பெருமிதம் அடைகிறோம். மிக முக்கியமாக, நீ இங்கு எங்களுடன் இருப்பதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ஏனென்றால்: நீ ஒரு அதிசயம்!
