நமது கடந்த காலமானது நமது முடிவு அல்ல

இன்று, ‘ரூத் புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்’ தொடரை நாம் தொடர்கிறோம். இதுவரை நீங்கள் அதை நன்கு கற்றறிந்தீர்களா?கதையின் தொடக்கத்தில், (ரூத் 1:3-19) ஒரு மோவாபியப் பெண்ணாகிய ரூத், தன் சொந்த நாட்டில் தன் கணவனுடன் தனது குடும்பத்தினருக்கு அருகாமையில் மகிழ்ச்சியாக வாழ்கிறாள்.பின்னர் அவளுடைய விதியும், அவளுடைய குடும்பத்தின் விதியும் மாறுகிறது. மேலும் அவள் திருமணமான பெண் என்ற நிலைமையிலிருந்து ஒரு ஏழைப் பெண்ணாக, குழந்தையற்ற ஒரு விதவையாக மாறுகிறாள். அவள் ஒரு அந்நிய தேசத்தில் தன் உணவைத் தேட வேண்டியிருந்தது. (ரூத் 2:2-3).
எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்ரவேலர்கள் மோவாபியர்களை இழிவாகப் பார்த்ததால், அவள் பிறந்த நாடு அவளை ஒதுக்கிவைத்திருக்கும். சாத்தியமான சூழல்கள் அவளுக்கு எதிராக அடுக்கடுக்காக இருந்தன. ரூத் அவளது மைத்துனச்சியைப் போலவே மீண்டும் ஒரு கூட்டுக்குள் அடைந்து, தன் குடும்பத்துடன் இருளில் வாழும்படி திரும்பிச் செல்வதற்கான காரணங்கள் அவளுக்கு ஏராளமாக இருந்தன (ரூத் 1:11,14). ஆனாலும், அவளது கடந்த காலம் அவளை வரையறுக்கவோ அல்லது அவள் முன்னேறிச் செல்வதைத் தடுத்து நிறுத்துவதையோ, ரூத் இடமளிக்கவில்லை. அவள் ஆண்டவருக்கு ஊழியம் செய்வதைத் தேர்ந்தெடுத்தாள். அவள் வாழ வேண்டிய வாழ்க்கை இன்னும் இருக்கிறது என்று அவள் விசுவாசித்தாள். இங்கே கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் என்னவென்றால், நாம் ஆண்டவரை நம்பும்போது, நமது கடந்த காலமானது நமது இறுதி இலக்காக இருக்காது, மேலும் நமது சூழ்நிலைகளுக்கு நம் வாழ்வின் விதியின் மீது அதிகாரம் இல்லை என்பதே ஆகும்.
ஒரு காலத்தில் தன்னை ஒதுக்கிவைக்கப்பட்டவராக கருதிய நாட்டில், ரூத் பிரபலமான நபராக மாறினாள்; குழந்தையற்ற, அந்நிய விதவை என்ற நிலையிலிருந்து, ரூத் ஒரு ஐசுவரியவானின் மனைவியாகவும், தாயாகவும், இயேசுவின் முன்னோர்களில் ஒருத்தியாகவும், ஏழு குமாரரைப்பார்க்கிலும் அருமையாயிருக்கிற ஒரு மருமகளாகவும் ஆனாள். (ரூத் 4:15). அன்பரே உங்கள் வாழ்க்கையை வரையறுக்கும் ஒரு முக்கிய காரணியாக ஏதோ ஒரு காரியம் உண்டு என்பதாகத் தோன்றுகிறதா? நீங்கள் ஒரு விதவையா, விவாகரத்து பெற்றவரா, குழந்தை இல்லாதவரா, குற்றவாளியா, வெளிநாட்டவரா, நோயாளியா, ஏழையா அல்லது படிப்பறிவற்றவரா? நீங்கள், யார் என்பதன் அடிப்படையில் வரையறுக்கப்படுவதில்லை என்பதை நினைவில்கொள்ளுங்கள், நீங்கள் யாருக்குச் சொந்தமான நபர் என்பதன் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறீர்கள்... நீங்கள் உன்னதமான தேவனுடைய பிள்ளையாய் இருக்கிறீர்கள்! “பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.” (1 யோவான் 3:2)

