• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 12 பிப்ரவரி 2025

நீண்ட தூரத்தில் இருந்துகொண்டு ஒருவரோடுள்ள உறவைப் பராமரிப்பது சாத்தியமாகுமா? 🤔

வெளியீட்டு தேதி 12 பிப்ரவரி 2025

உங்களுக்கு தொலைதூரத்தில் இருக்கும் நண்பர்களோ அல்லது தொலைதூரத்தில் வாழும் உறவினர்களோ இருக்கிறார்களா? கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை, நான் என் குடும்பத்திலிருந்து விலகி, வெகு தூரத்தில் உள்ள வேறு ஒரு நாட்டில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துகொண்டிருந்தேன், நான் அவர்களிடமிருந்து விலகி இருந்ததால் மிகவும் தனிமையாக உணர்ந்தேன்! ஒவ்வொரு உறவுக்குமான ஒரு முக்கிய அம்சமே அருகாமைதான்: அதாவது, நீங்கள் நேசிக்கும் ஒரு நபருடன் நெருக்கமான உறவில் இருப்பது என்பதுதான் இதன் அர்த்தம். தொலைதூரத்தில் வாழ்ந்த ஒரு நபர், அப்படி வாழ்ந்துகொண்டு ஒருவருடன் நல்ல உறவு வைத்துக்கொள்ள முயற்சிப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்றுதான் சொல்வார்கள்! ஆண்டவர் எங்கும் நிறைந்திருப்பதன் அழகு என்னவென்றால், நீங்கள் எங்கிருந்தாலும் அவர் உங்கள் அருகில் இருக்கிறார்! ஆண்டவர் உங்களுக்கு அருகில் இருக்க விரும்புகிறார், நீங்கள் எங்கிருந்தாலும் அவர் உங்களுக்கு அருகில் இருக்கிறார் என்பதே அவரது எங்கும் நிறைந்திருக்கும் தன்மைக்கான அழகு!  “உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்;அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்;அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து,தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்;அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்." (செப்பனியா 3:17)  ஆண்டவர் நமக்கு நெருக்கமானவர் என்பதை அறிந்து நமக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார், அவருடைய குமாரனான இயேசுவுக்கு அவர் வைத்த பெயர்களில் ஒன்று 'இம்மானுவேல்', அதாவது 'தேவன் நம்மோடு இருக்கிறார்' என்று அர்த்தம் (மத்தேயு 1:23, ஏசாயா 7:14).    ஆண்டவர் நம் கண்ணீரை ஒரு துருத்தியில் சேகரிக்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது. (சங்கீதம் 56:8)  ஒருவரின் கண்ணீரை சேகரிக்க வேண்டுமானால், நீங்கள் அவர்களுக்கு மிகவும் அருகில் இருக்க வேண்டும். இது அன்பு மற்றும் நெருக்கத்துக்கு அடையாளமாக விளங்கும் உண்மையான செயல். ஆனால் இதிலும் மேலான ஒரு அனுபவம்தான் இது. ஆண்டவர் உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நபராக மட்டுமல்ல, அவர் உங்களுக்குள்ளே தங்கியிருக்கவும், இயேசுவின் மூலம் உங்களுடன் ஒன்றாக இணைந்திருக்கவும் விரும்புகிறார்! யோவான் 17:22-23ல் இயேசு இவ்வாறு சொல்கிறார்: "நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். ... நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்."  அன்பரே, உங்கள் குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ தொலைதூரத்தில் இருந்தாலும்,​ ஆண்டவர் எப்போதும் உங்களுக்கு அருகில் இருக்கிறார். அவர் தொலைதூரத்தில் உள்ளவரோ அல்லது நம்மிடமிருந்து பிரிந்து வாழும் தெய்வமோ அல்ல; அவர் உங்களுடன் நெருக்கமாக இருக்க ஆசைப்படுகிறார்!

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.