தூண் அற்ற மேடையாக அல்ல; மேடைக்குத் தூணாக இருங்கள்.

கடந்த சில நாட்களாக, மேடையை நாடி ஓடுவதை விட, ஒரு தூணாக மாறுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் பார்த்துவந்தோம். நான் இதற்கு முன்பு சில முறை சொல்லியிருக்கிறேன், மறுபடியும் உங்களுக்குச் சொல்கிறேன்: மேடைகள் தீமைக்கான ஒன்று அல்ல. உண்மையில், அவை சிறந்தவைதான் என்று நான் நினைக்கிறேன். யெஷுவா ஊழியங்கள் மூலம் லட்சக்கணக்கானவர்களை ஆண்டவரிடத்தில் நெருங்கி வரச் செய்து, இந்தியாவின் மிகப்பெரிய ஆராதனைத் தளங்களில் ஒன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஆனால் ஒரு மேடை கொண்டு வரக்கூடிய ஆபத்துகள் மற்றும் பின்னடைவுகளை நான் பார்த்திருக்கிறேன்; சரியான அடித்தளம் இல்லாததால் அவை பல துண்டுகளாக உடைந்து நொறுங்கி விழுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே உறுதியான, நிலைத்து நிற்கும் மேடைகளை உருவாக்கி அவற்றை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது? இது ஒரு தூணை அடித்தளமாக்குவதன் மூலம் தொடங்குகிறது: “ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது." (மத்தேயு 7:24-27) நாம் கட்டப்பட வேண்டிய கன்மலை இயேசுவே. நாம் அவருக்கு இடமளித்தால் அவர் நம்மைத் தூண்களாக்குவார் (வெளிப்படுத்தின விசேஷம் 3:12). அவருடனான நமது உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும், அவருடைய உபதேசங்களைக் கேட்டு, அவைகளைக் கைக்கொண்டு வாழுங்கள். அஸ்திபாரத்தின் மீது தூண்கள் உண்டாக்கி பாதுகாப்பாக கட்டப்படாத மேடைகளை நம்பி செல்லும்போது, அவை இடிந்து நம் மீது விழும் ஆபத்து நெரிடும். தூண்களாக இருப்பதில் நாம் கவனம் செலுத்தும்போது, பெரிய மேடைகளோ அல்லது சிறிய மேடைகளோ - அவை நம்மைப் பின்தொடர்ந்து வரும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். "நீண்டகாலம் எடுத்து பொறுமையாகக் கட்டப்பட்ட தூண்கள் நம்பகத்தன்மையுள்ள மற்றும் ஞானம் விளங்கும் தளங்களை உருவாக்கும்" - ஃபில் டூலி "நான் இதை எப்படி செய்வது?" என்று நீங்கள் கேட்கலாம். இயேசுவை அறிந்துகொள்ளுதல், நம் கண்களை அவர் மீது வைத்தல், முதலாவது அவருடைய ராஜ்யத்தைத் தேடுதல் மற்றும் மேலானவைகளை நாடுதல் ஆகியவற்றின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று வேதாகமம் மீண்டும் மீண்டும் நம்மை வலியுறுத்துகிறது. (எபிரெயர் 12.1-2) (மத்தேயு 6.33) (கொலோசெயர் 3.1-2) அன்பரே, நீங்கள் எதை உருவாக்குகிறீர்கள் என்பதை விட, நீங்கள் யாராக மாற விரும்புகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த இன்றே தீர்மானம் செய்யுங்கள்.

