நன்மை செய்வதால்... பல நன்மைகள் கிடைக்கும்!
ஒருநாள், மற்றவர்களுக்கு நன்மை செய்த பிறகு, அவள் எவ்வளவு சந்தோஷமாக உணர்ந்தாள் என்பதைப் பகிர்ந்துகொண்ட ஒரு சகோதரியின் சாட்சியை நான் வாசித்துக்கொண்டிருந்தேன்!
அன்பரே, நீண்ட நேரம் வேலை பார்த்துவிட்டு களைப்புடன் சாலையில் நடந்து செல்லும் ஒருவரைப் பார்த்து புன்னகைப்பதன் மூலம் வரும் இனிமையான மகிழ்ச்சியுண்டாக்கும் உணர்வை நீ எப்போதாவது ருசித்திருக்கிறாயா? அல்லது ஒரு வயதான மூதாட்டிக்காக உன் வீட்டுக்கதவைத் திறந்து வைத்த பிறகு, உனக்கு உண்டாகும் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறாயா? அல்லது உன் அண்டை வீட்டாருக்கு உதவிக்கரம் நீட்டும்போது உண்டாகும் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறாயா?
“உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்." (நீதிமொழிகள் 11:25)
மற்றவர்களுக்கு நன்மை செய்யும்போது நம் ஆத்துமாவில் ஒரு திருப்தி உண்டாகும். ஆத்துமா அதன் மூலம் செழிப்படையும். ஆம், அன்பரே, ஒவ்வொரு முறையும் நீ ஒருவருக்கு நன்மை செய்யும்போது, உன் ஆத்துமா மிகவும் திருப்தி அடைகிறது. மேலும் இந்த வசனத்தில், ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பதாகவும், அதைத் திரும்பத் தருவதாகவும் வாக்களிக்கிறார். தண்ணீர் பாய்ச்சுகிறவர்களுக்கு அவர் தண்ணீர் பாய்ச்சுகிறார். மேலும் அவருடைய தண்ணீர் கலன் நம்முடைய கலனை விட மிகவும் பெரியது! :-)
இன்றைக்கு அனைவரின் சார்பாகவும், நீ செய்யும் நன்மைக்காக நான் உனக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்... உன் வாழ்விற்காய் நன்றி. மற்றவர்கள் ஜீவனைப் பெறும்படி உதவி செய்ததற்கு நன்றி. நீ உதவி செய்யும் இடத்தில் இருப்பதற்கு நன்றி, நீ உதவி செய்ததற்கு நன்றி. நீ இந்த உலகத்தை மேம்படுத்துவதற்காகவும், அநேகருடைய இருதயங்களிலும் வாழ்விலும் இயேசுவின் ஒளியைப் பிரகாசிக்கச் செய்வதற்காகவும் நன்றி.
இன்று மென்மேலும் ஆசீர்வதிக்கப்படுவாயாக!
