• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 14 மார்ச் 2025

நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள் - நீதிமொழிகள் 19:20

வெளியீட்டு தேதி 14 மார்ச் 2025

‘பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்’ என்ற இந்தத் தொடரை நீங்கள் இதுவரை நன்கு கற்றறிந்தீர்களா? புதிதாக ஏதாவது கற்றுக்கொண்டீர்களா அல்லது ஏதேனும் வெளிப்பாடுகளைப் பெற்றிருக்கிறீர்களா? அதைப் பற்றி நானும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

நான் முன்பு சொன்னதுபோல், ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய சித்தத்தை நேரடியாகப் புரிந்துகொள்ள முடியும். நமக்கு மத்தியஸ்தராக செயல்பட ஒரு தீர்க்கதரிசி, பாதிரியார் அல்லது போதகர் போன்ற ஒரு பரிசுத்த நபரை நாம் இனி சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நமது மகா பிரதான ஆசாரியரான இயேசு பரலோகத்தில் இருக்கிறார், மேலும் அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் நாம் பிதாவிடம் திரும்பி வருவதற்கான வழியை அவர் நமக்கு உண்டாக்கியிருக்கிறார். இப்போது:

“நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” (எபிரெயர் 4:16

அப்படிச் சொன்னாலும், தேவ மனிதர்களிடமிருந்து ஞானமான ஆலோசனையைத் தேடுவது ஆவிக்குரிய பகுத்தறிவுக்கும் வேதாகம கொள்கைக்கும் மிக முக்கியமானது:

“உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.” (நீதிமொழிகள் 19:20

“மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.” (நீதிமொழிகள் 12:15)

“நல்யோசனைசெய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.” (நீதிமொழிகள் 24:6) 

யாத்திராகமம் 18ஆம் அத்தியாயத்தில் மோசே மற்றும் அவரது மாமனார் எத்திரோவின் சம்பவம் இதற்கு ஒரு அழகான உதாரணம். மோசே அதிகமான வேலைப்பளுவால் களைப்படைந்திருப்பதை எத்திரோ கவனித்து, அவருக்கு நல்ல திறமையான, நடைமுறை ஆலோசனையை வழங்குகிறார். முதலில், அவர் சிந்திக்கத் தூண்டும் கேள்விகளைக் கேட்கிறார். (யாத்திராகமம் 18:14) பின்னர் மோசேயின் வாழ்வின் நலன் கருதி உண்மையான அக்கறையுடன் ஒரு தீர்வை வழங்குகிறார் (யாத்திராகமம் 18:18). 

இறுதியாக, தனது ஆலோசனையைப் பொருட்படுத்தாமல், ஆண்டவர்தான் தம்முடைய சித்தத்தை மோசேக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்:

"இந்தப்பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்; இந்த ஜனங்கள் எல்லாரும் தாங்கள் போகும் இடத்துக்குச் சுகமாய்ப் போய்ச் சேரலாம் என்றான்." (யாத்திராகமம் 18:23

அன்பரே, உங்கள் வாழ்க்கையில் "எத்திரோக்கள்" யார்? நீங்கள் நம்பும் தெய்வீக ஆலோசகர்களைப் பட்டியலிட ஒரு நிமிடம் ஒதுக்குங்கள் - சரியான கேள்விகளைக் கேட்பவர்கள், உங்கள் நல்வாழ்வில் அக்கறை கொண்டவர்கள் மற்றும் ஆண்டவர்தான் தீர்மானம் எடுப்பவர் என்பதை உணர்ந்தவர்களைப் பட்டியலிடுங்கள்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.