“நான் உன்னை தேர்ந்தெடுக்கிறேன், அன்பரே”
ஆண்டவர் உங்களிடம் பேசுவதை கேட்க இன்று நான் உங்களை அழைக்கிறேன். இந்த வார்த்தைகள் உங்கள் மனதின் ஆழத்தை தொடுவதற்கு அனுமதியுங்கள்…
“அது நீதான்,
நற்செய்தியை அறிவிக்க நான் தேர்ந்தெடுப்பது நீதான். பரலோக ராஜ்யத்தின் விசேஷத்தை உருவகப்படுத்துவதற்கு. அன்போடு கூட வேற்றுமை இல்லாமல் உண்மையை அறிவிப்பதற்கு.
நான் உன்னை என் வாசஸ்தலமாக தேர்ந்துகொள்கிறேன், என் ராஜ்யத்தை உன் வாழ்க்கையில் நிலைநாட்ட விரும்புகிறேன். நான் உன்னை என் ராஜ்யத்தின் தூதராகவும், என் அன்பின் தூதராகவும் தெரிந்துகொண்டுள்ளேன்.
ஆம், இந்த உலகம் ஒரு புரட்சியை காணும். ஒரு அன்பின் புரட்சி! நிறுத்தவோ, தடை செய்யவோ முடியாத ஒரு அன்பு. இந்த அன்பு உன் மூலமாக வெளிப்படும். எனக்கு முக்கியத்துவம் இல்லை, நான் ஒரு பொருட்டு அல்ல, என்னால் இது முடியாது என்றெல்லாம் நீ சொல்லக்கூடாது… உன்னிடம் என் ஆவியும் என் வார்த்தையும் உள்ளது!
என் முகத்தை தேடு, என்னை தேடு. கற்றுக்கொள், என்னிடம் இருந்து கற்றுக்கொள். உன் நினைவுகளை என் மீது வைத்து செயல்படு, அன்போடும் கிருபையோடும் செயல்படு.
பசியில் வாடுபவரை பார்க்கும்போது உன் கண்களை திருப்பாதிரு... அவர்களுக்கு உதவி கரம் நீட்டு. வலியில் அழுவோரை பார்க்கும்போது உன் கண்களை மூடாமல் இரு... அவர்களுடைய துக்கத்தில் பங்கு பெறு. விதவையையும் அனாதைகளையும் ஒதுக்காதே. சிறையில் அடைபட்டிருப்போரை மறவாதிரு.
நான் அநேக உயிர்களை தொட்டு மறுரூபமாக்க விரும்புகிறேன், அதை உன் மூலமாக செய்ய விரும்புகிறேன்.
நீ என்னுடைய மரபணுவை (DNA) பெற்றுள்ளாய், என் இரத்தம் உன்னுள் பாய்கிறது. நான் எவ்வாறெல்லாம் இருக்கிறேனோ, நீயும் அவ்வாறாக இருக்க விரும்புகிறேன். அன்போடு, தாராளமனதோடு, மனதுருக்கத்தோடு இரு.
மறந்துவிடாதே : நீ உலகிற்கு உப்பும் ஒளியுமாய் இருக்கிறாய்!”
இன்று நீங்கள் பெற்ற இந்த “அற்புத" செய்தியை மேலும் தியானிக்க இந்த வசனங்களை எடுத்து வாசியுங்கள்: மத்தேயு 5:14, லூக்கா 11:33, மத்தேயு 28:19, மத்தேயு 25:34-40, மத்தேயு 5:13-14.
