நான் உன்னை நேசிக்கிறேன்... என்று ஆண்டவர் உன்னிடம் கூறும்போது…
இன்று, தகப்பனுடைய இருதயத்திலிருந்து வருகிற திடநம்பிக்கை அளிக்கும் இந்த வார்த்தைகளால் ஊக்குவிக்கப்பட நான் உங்களை அழைக்கிறேன்:
"அன்பரே, என் மகனே/மகளே!,
வாழ்க்கையில் துவண்டுபோகாதிருக்கும்படி, என்னிடமிருந்து ஒரு அடையாளத்தை எதிர்பார்த்து ஒருவேளை, இந்த செய்தியை இன்று நீ திறந்திருக்கலாம்.
ஒருவேளை உண்மையான நிறைவேறுதல் என்ன என்பதை நீ அனுபவிக்காமல் இருக்கலாம்.
உன் கவலைகளை விட என் அன்பு வலிமையானது என்பதை நான் உனக்குக் காட்டுவேன்.
உன் கஷ்டங்களை விடப் பெரியது,
உன் காயங்களை விட ஆழமானது.
என் அன்பு எல்லாவற்றையும் உள்ளடக்கியது.
நீ நினைத்தது போல் விஷயங்கள் நடக்காதபோது,
நான் மாறாதவராகவே இருக்கிறேன்.
நான் எந்நாளும் உனக்காக ஆயத்தமாக இருக்கிறேன்.
நீ நம்ப முடியாத அளவிற்கு மகா பெரிய திட்டங்கள் வைத்துள்ளேன்,
நான் அவைகளைப் பற்றி சொன்னாலும் நம்பமாட்டாய்.
இன்று, என் அருகில் வா!
நான் உன்னை மீட்டுக்கொள்வேன் ... ஏனென்றால், நான் செய்வதை விட சிறப்பாக வேறு யாராலும் செய்ய முடியாது.
நான் உன்னில் அன்புகூறுகிறேன்,
இயேசு."
இதோ, உங்களுக்கான என் ஜெபம், அன்பரே. இது அப்போஸ்தலனாகிய பவுல், எபேசியருக்கு எழுதிய நிருபத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டது: "விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்." (வேதாகமம், எபேசியர் 3: 17-19)
