• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 13 செப்டெம்பர் 2024

நான் உன்னை நேசிக்கிறேன் என்று ஆண்டவர் சொல்கிறார்... ❤️

வெளியீட்டு தேதி 13 செப்டெம்பர் 2024

தகப்பனின் இதயத்திலிருந்து வரும் இந்த ஊக்கமூட்டும் வார்த்தைகள் மூலம் இன்று உன்னை உற்சாகப்படுத்த விரும்புகிறேன்:

“அன்பரே, என் மகனே / மகளே,

ஒருவேளை, இன்று நான் அனுப்பியுள்ள செய்தி என்னவென்று எதிர்பார்த்து, நீ  இதைத் திறந்திருக்கலாம்.

ஒருவேளை உண்மையான திருப்தி என்ன என்பதை நீ ஒருபோதும் அனுபவிக்காமல் இருந்திருக்கலாம்.

உன் கவலைகளை விட என் அன்பு வலுவானது என்பதை நான் உனக்குக் காட்டுவேன்.

அது உன் சிரமங்களை விட பெரியது,

உன் காயங்களை விட அது ஆழமானது.

என் அன்பு சகலத்தையும் தாங்குகிறது.

நீ நினைத்ததுபோல் விஷயங்கள் நடக்காதபோது,

நான் அப்படியே மாறாதவராக இருக்கிறேன்.

நான் உனக்காக எண்ணிலடங்கா விஷயங்களை வைத்து வைத்துள்ளேன்.

அவற்றைப் பற்றி நான் உன்னிடம் சொன்னாலும் கூட,

உன்னால் யோசித்துப் பார்க்க முடியாத அளவுக்கு, அவை மிகப்பெரிய திட்டங்களாய் உள்ளன.

இன்று என் அருகில் வா.

நான் உன்னை மீட்டெடுக்கட்டும்... ஏனென்றால் என்னை விட சிறப்பாக வேறு யாராலும் இதைச் செய்ய முடியாது.

 நான் உன்னை நேசிக்கிறேன்,

_ உன் அன்பான இயேசு."

அன்பரே, இதோ உனக்கான எனது ஜெபம். இது அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர்களுக்கு எழுதிய நிருபத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டது: “விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம்பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்."  (எபேசியர் 3:17-19)

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “சரி, நான் ஆண்டவரிடத்தில் எனக்குப் பிடித்த எல்லாவற்றையும் பற்றி உன்னிடம் சொல்கிறேன். போதைப்பொருள் விற்று கிட்டத்தட்ட ஒரு மனிதனின் உயிரைப் பறித்த என்னைப் போன்ற ஒரு நபரால்தான் இன்னொரு மனிதனுக்கு இதைச் சொல்ல முடியும். ஆண்டவர் என் மனநிலையை மீட்டெடுத்து, அன்பு என்றால் என்ன என்பதைக் காட்டினார். சிறையில் இருந்தபோது, இரவு நேரங்களில் நான் என்னைத் திருத்திக்கொள்ள முடியும் என்று நினைத்தேன். நான் தவறு செய்தேன், நான் உடைந்துபோனேன். ஒரு சந்தர்ப்பத்தில், ஆண்டவர் என்னைச் சந்தித்தார். நான் அவரைத் தேடும்போது, ​​அவர் சிலரை என் வாழ்க்கையில் கொண்டு வந்தார். அவர் என் குடும்பத்தினரை என்னிடம் திரும்ப சேரும்படி செய்தார். என்னை நேசிக்கும் நல்ல நண்பர்களைக் கொடுத்தார், தெளிந்த புத்தியைக் கொடுத்தார். ஆண்டவர் என் இதயத்திலிருந்த வெறுப்பை அகற்றி, அனைவரையும் நேசிக்க வைத்தார். அவர் என்னில் இருப்பதால் நான் சாட்சி பகர்கிறேன். நீ ஆண்டவரைப் பற்றிக்கொள். அவரை விட்டுவிடாதே." (ரேச்சல், காரைக்கால்)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.