வெளியீட்டு தேதி 21 ஆகஸ்ட் 2023
                            
                                            அன்பரே, நாம் ஒன்றாக இணைந்து இயேசுவைப் பற்றி சிந்திப்போம்!
                                வெளியீட்டு தேதி 21 ஆகஸ்ட் 2023
                            
                                                            தேவனுடைய வார்த்தையை விட வல்லமை வாய்ந்தது எதுவுமில்லை. இந்த வார்த்தை ஜீவனுள்ளதும், வல்லமை மிக்கதும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்தைவிடவும் கூர்மையானதுமாய் இருக்கிறது!
அன்பரே, அதனால்தான் இன்று, வேதாகமத்திலிருந்து ஒரு அற்புதமான பத்தியை நான் உனக்குக் காட்ட விரும்புகிறேன்.
அது உன் ஆத்துமாவில் தங்கியிருக்கட்டும். இந்த வார்த்தைகள் வாயிலாக நீ இயேசுவைப் பார்க்கவும், சிந்திக்கவும் நாடு. ஒவ்வொரு வார்த்தையையும் உன் உள்ளத்தின் ஆழத்தில் வைத்து விசுவாசிப்பதைத் தெரிந்துகொள். மேலும் அந்த வார்த்தையானது உன்னைத் தொட்டு குணப்படுத்த அனுமதி!
- “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும்,
- தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
- அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
- ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
- பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும்,
- எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்."
(வேதாகமத்தில் பிலிப்பியர் 2:5-11ஐப் பார்க்கவும்)
எல்லா மகிமையும் தேவன் ஒருவருக்கே உண்டாவதாக!
 
                                                            