• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 15 டிசம்பர் 2024

நாம் சில கற்களை எறிவோம்! 🪨

வெளியீட்டு தேதி 15 டிசம்பர் 2024

‘அனுதினமும் ஒரு அதிசயத்திற்கு'  உன்னை வரவேற்கிறோம்! இன்று நீ எப்படி உணர்கிறாய்? நீ உற்சாகமுள்ள நபராய் மற்றவர்களை ஊக்குவிக்க தயாராக இருக்கிறாயா?

வேதாகமத்தில், இயேசு பல பிரமிக்க வைக்கும் அற்புதங்களைச் செய்தார். அவற்றை வாசிக்கும்போது, அந்த அற்புதங்களைப் பெற்றுக்கொண்டவர்களது நலனுக்காக மட்டுமே செய்யப்படவில்லை என்பதை அவை வெளிப்படுத்துகின்றன. மாறாக, அவை தண்ணீரில் எறியப்பட்ட கற்கள் தொடர்ந்து சிறிய அளவிலான அலைகளை ஏற்படுத்துவதைப்போல, தொடர்ந்துகொண்டே இருக்கும். 

இந்த அற்புதங்களைக் கவனி: 

  • ஒரு முடவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள், அவர் அவனைப் பார்த்து சொன்னதை நாம் இங்கே வாசிக்கலாம்: “நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கும் முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்."  – மாற்கு 2:11-12  
  • இயேசு ஒரு குருடனைக் குணப்படுத்தியபோது, "உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்."லூக்கா 18:43  
  • "பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்."மத்தேயு 9:33 
  • "அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள்." யோவான் 6:2

ஒவ்வொரு அற்புதமும் மக்கள் ஆண்டவரைத் துதிப்பதற்கும், இயேசுவின் வல்லமையைக் கண்டு வியந்து அவரைப் பின்பற்றுவதற்கும் வழிவகுத்தது. நம் வாழ்க்கையிலும் அது அப்படிப்பட்ட விளைவைத்தான் ஏற்படுத்துகிறது.

அன்பரே, நாம் ஜீவனோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அற்புதங்களே! நம்மைச் சுற்றியுள்ள உலகில் சிற்றலைபோன்ற விளைவுகளை உருவாக்க நாம் வடிவமைக்கப்பட்டுள்ளோம். மேலும் நம் வாழ்க்கையானது இயேசுவைப் பின்பற்றும்படி மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இந்த 'அனுதினமும் ஒரு அதிசயத்தை' ஊக்கம் தேவைப்படும் நண்பர்கள் சிலருக்கு அனுப்புவதும், அவர்களின் அனுமதியுடன், அவர்களை எங்களது குழுவினர் பட்டியலில் சேர்ப்பதும் அவர்களை ஊக்குவிக்கத் தொடங்குவதற்கான ஒரு எளிய வழியாகும்.

Cameron & Jenny Mendes
எழுத்தாளர்

Directors and visionaries of Yeshua Ministries, in love with each other, their son and above all, Jesus.