நோயின் பிறப்பிடம் பற்றி உனக்குத் தெரியுமா?
"இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று." (ரோமர் 5:12)
முதல் மனிதனான ஆதாமின் பாவத்தைத் தொடர்ந்து உலகில் வியாதி நுழைந்தது என்பதை நிரூபிக்கும் குறிப்பிட்ட வேத வசனம் எதுவும் நேரடியாக இல்லை என்றாலும் கூட, பாவத்திற்கு முன், மரணம் இல்லை என்பது உறுதி. மரணம் இல்லை என்றால், சரீர சீர்குலைவு இல்லை, சரீர சீர்குலைவு இல்லை என்றால், நோய் எதுவும் இருந்திருக்க முடியாது.
மனுக்குலம் தெய்வீக மற்றும் ஒழுக்கநெறி சட்டத்தை மீறியதால் உபாகமம் 28ம் அதிகாரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தீமைகளையும் அனுபவிக்க நேர்ந்தது. உலகமானது வீழ்ச்சியின் விளைவை சந்திக்க நேர்ந்தது, சாபம் மற்றும் துன்பம் எனும் நாடகம் அடங்கிய காட்சிகள் அரங்கேற்றம் ஆனது. மனிதர்கள் காயமடைந்தார்கள், கட்டப்பட்டார்கள், குத்தப்பட்டார்கள், ஒடுக்கப்பட்டார்கள், உடைக்கப்பட்டார்கள், ஊனமுற்றவர்களானார்கள், முடவர்களானார்கள், குருடர்களானார்கள், ஊமைகளானார்கள், செவிடர்களானார்கள்; இவ்வாறு அனைவரும் இந்த முடிவில்லாத பயணத்தில் தங்கள் பங்கை ஆற்றுகிறார்கள்.
“பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்." (1 யோவான் 3:8)
அன்பரே, உனக்கான நற்செய்தியானது, பிசாசின் கிரியைகளை அழிக்கவே இயேசு வந்தார் என்பதே!
