வெளியீட்டு தேதி 25 ஜனவரி 2023

அன்பரே, நிறுத்த வேண்டாம்!

வெளியீட்டு தேதி 25 ஜனவரி 2023

“என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது, தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்."  (வேதாகமத்தில் சங்கீதம் 73:26 ஐ வாசிக்கவும்) 

எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும், இனி எந்த நம்பிக்கைக்கான வாய்ப்பும் இல்லை என்றும் பல விஷயங்கள் உன்னை நம்ப வைக்கும்... சோர்வு, உடல்நலப் பிரச்சனைகள், மோதல்கள் மற்றும் சண்டைகள், போன்றவை அன்றாடம் நாம் எதிர்கொள்ள வேண்டிய எண்ணற்ற சவால்களாய் இருக்கின்றன...

வேதாகமத்தில், உலகம் உருவானபோது, ​​“பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்."  (வேதாகமத்தில், ஆதியாகமம் 1:2 ஐ வாசிக்கவும்).

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "வெளிச்சம் உண்டாகட்டும்"... என்ற இந்த அசாதாரண ஜீவ வார்த்தை உச்சரிக்கப்படும் வரை எல்லாம் வெறுமையாகவும் அசைவற்றதாகவும் காணப்பட்டது!"

அதற்குப் பிறகு நடந்தது என்ன என்று உனக்குத் தெரியும்... வெளிச்சம் உண்டானது! வெளிச்சம் வந்தது! இருளின் மத்தியிலிருந்து பகலின் வெளிச்சம் வந்தது.

ஆண்டவர் பேசும் போது, ​​எல்லாம் அவருடைய சித்தத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் செல்கிறது. அவர் சொன்னதும், அவர் கட்டளையிட்டதும் நடக்கும்படிக்கு அனைத்தும் ஒத்துழைக்கிறது.

இன்று, விசுவாசிப்பதை நிறுத்தாதே, அன்பரே. கொடுப்பதையும், மன்னிப்பதையும், நேசிப்பதையும் நிறுத்தாதே!

உன் மீது தேவன் வைத்திருக்கும் அன்பின் பலத்தையும், உன்னில் உள்ள அவருடைய ஜீவனின் பலத்தையும் தொடர்ந்து விசுவாசி.  மீண்டும் மீண்டும், இந்த பெரிய தேவன் மீது உன் விசுவாசத்தை வைத்திரு. உன் வாழ்க்கையை அவருக்குத் திருப்பிக் கொடு, உன்னிடத்தில், "செயல்படாத", "சாத்தியமற்ற", "மரித்த", "நம்பிக்கையற்றதாக" தோன்றுவதை அவரிடத்தில் விட்டுவிடு.

இந்த வார்த்தையைப் பெற்றுக்கொள்... வெளிச்சம் உண்டாகட்டும்! அன்பரே, வெளிச்சம் புறப்பட்டு வருகிறது, உன் அற்புதம் வெளிப்படுகிறது!

Eric Célérier
எழுத்தாளர்