• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 5 நவம்பர் 2023

அன்பரே, நல்ல போராட்டத்தை போராடு, உன் ஓட்டத்தை வெற்றியுடன் ஓடி முடி!

வெளியீட்டு தேதி 5 நவம்பர் 2023

பரிசுத்த வேதாகமத்தில் அப்போஸ்தலர் நடபடிகள் 18: 1-26ல்  

பவுல் ஆக்கில்லாவையும், பிரிஸ்கில்லாவையும் சந்தித்ததைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இத்தம்பதியினர் கிறிஸ்தவர்களுக்கு நேர்ந்த உபத்திரவத்தின் நிமித்தமாக கட்டாயத்தின் பேரில் ரோம் நகரத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். அவர்கள் தங்கள் வீடு, வேலை, குடும்பம் என தங்களுக்குரிய அனைத்தையும் இழந்தனர்.

ஆனால் அவர்கள் சரித்திரம் அத்துடன் முடிந்துவிடவில்லை. ஊழியத்தில் அவர்கள் ஆற்றிய முக்கிய பங்கு நம் அனைவருக்கும் தெரியும். அவர்கள் பவுலோடு இணைந்து தேவப் பணியை செய்தார்கள். முதல் திருச்சபையின் ஊழியர்களாய்த் திகழ்ந்தார்கள். எனவே, அவர்களின் பெயர்கள் பல நூற்றாண்டுகள் தாண்டி இன்றும் நம் மத்தியில் அறியப்படுகிறது.

உன் வாழ்வில் எல்லாம் கோணலாய் போகும் போது, நீ பின் வாங்கிப்போவதற்கு சாதகமான சூழல் உனக்கு ஏற்படும்போது நீ எப்படி நடந்துகொள்வாய்? இந்த சூழலின் மத்தியிலும், தமது சித்தத்தை நிறைவேற்ற, கர்த்தர் சிறந்த அழகான வேறு ஒரு புதிய காரியத்தை  ஆயத்தம்பண்ணுகிறார் என நீ நம்புவாயா?

அன்பரே, சில நேரங்களில் உன் வாழ்வில் நீ சந்திக்கும் நிராகரிப்புகளும், உனக்கு இழைக்கப்படும் அநீதிகளும் உன் விசுவாச ஓட்டத்தை சவாலானதாக மாற்றுகிறதா? உன் வாழ்வில் நீ சந்திக்கும் ஊக்கமின்மைகள், கர்த்தர் உன் வாழ்விற்காய் வைத்திருக்கும் அதிசயமான திட்டங்களுக்கு  தடையாக இருக்காது!

நல்ல போராட்டத்தை போராடு, ஓட்டத்தை வெற்றியுடன் ஓடி முடி… கர்த்தர் உனக்காக பல நன்மைகளை தம் பொக்கிஷசாலையில் வைத்திருக்கிறார்.

இன்று நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “கடந்த 17 ஆண்டுகளாக இயங்கிய எங்கள் சபை, துக்கத்தோடும், கவலையோடும், போராட்டத்தோடும், மிகவும் உடைக்கப்பட்ட ஒரு நிலையை நோக்கி சென்றுகொண்டிருந்தது. நிறைய உறுப்பினர்கள் பிரிந்து சென்றுவிட்டனர். அந்த இழப்பை கடந்து செல்லவும், கோபம், கசப்பு போன்றவைகள் என்னுள் வேர்பற்றி விடாமல் இருக்கவும் நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அந்த நாட்களில் தேவன் என்னைப் பிரித்து தனிமையில் வைத்திருந்தார். ஒரு கட்டத்தில், தேவன் எனக்காய் வைத்திருந்த திட்டங்களை என்னால் புரிந்துக்கொள்ள முடியாமல் போனதால், நான் மன அழுத்தத்திற்குள்ளானேன்.

தின தியான செய்தியானது, கம்பளிப்பூச்சி பட்டுப்புழுவாக உருமாறி பின்பு பட்டாம்பூச்சியாய் எப்படி வெளிவருகிறது என்பதைப் பற்றி எடுத்துரைத்தது. அப்போது, தேவன் என்னோடு பேசத் தொடங்கினார்.கொஞ்ச நாட்களுக்கு துன்பத்தை அனுபவிக்கும் ஒரு பட்டுப்புழுவாக இருந்து, உருமாற்றத்தை அடைய வேண்டும் என்றும், இந்தக் கூட்டை விட்டு ஒரு பட்டாம்பூச்சியாய் வெளியே வரும் நாளில், நீ என் பெரிதான திட்டத்தைப் புரிந்துக்கொள்வாய் என்றும் கூறினார். நான் அவரைத் தொடர்ந்து விசுவாசித்து அவரில் இளைப்பாற வேண்டும் என்றும் கூறினார். அந்த தினதியான வார்த்தைகள் என் கடினமான நேரங்களில் எனக்கு ஊக்கமும், நம்பிக்கையும் கொடுத்தன. என் வாழ்வு கர்த்தரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்ற நம்பிக்கையை அந்த சத்தியம் எனக்குக் கொடுத்தது. நான் அந்த சத்தியத்தை நம்பினாலும், உங்கள் பதிவுகளின் மூலம் என்னால் மீண்டும் அந்த வார்த்தைகளை  உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது.மின்னஞ்சல் வழியாகப் பகிரப்படும் உங்கள் பதிவுகளை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.” (ஜூடி)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.