• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 11 மே 2023

நாள் 11 : ஆவியிலும் உண்மையிலும்

வெளியீட்டு தேதி 11 மே 2023

ஒரு நல்ல மனிதரை மணந்து கொள்ள வேண்டும் என்ற கனவு எனக்கு எப்போதும் இருந்தது. என்னை நேசிக்கும் ஒருவரை மணந்து, சர்வவல்லமையுள்ள தேவனின் கொள்கைகளின்படி நான் ஒரு நல்ல குடும்பத்தை நியாயப்பிரமாணத்தில் கட்டளையிட்டதைப் போன்று ஒரு அழகான குடும்பத்தை கட்டி எழுப்ப வேண்டுமென்று விரும்பினேன்.

விருப்பத்திற்கு மாறாக, எனது திருமண அனுபவம் நான் எதிர்பார்த்து நம்பியது போல் அமையவில்லை.  பல சமயங்களில், என் கணவர்கள் ஆண்டவரைத் தேடாத, சுயநலவாதிகள் என்று கண்டேன்.  மற்ற சமயங்களில் என் சொந்த சிந்தனைகளும், என் நிலையற்ற நிலைமையுமே என் பிரச்சனையாக இருந்தது. உண்மை என்னவென்றால், எனது ஐந்து திருமணங்களிலும் நான் தோல்வியடைந்தேன், இந்த பயணத்தில் என் விசுவாசம் பாதிக்கப்பட்டது.

என் பக்கத்து வீட்டுக்காரர்கள் எனது சிக்கலான காதல் வாழ்க்கையைப் பார்த்து என்னை வெறுத்தார்கள். காலை நேர குளிரில் அவர்களுடன் கிணற்றுக்கு நீர் எடுக்க செல்லக்கூட என்னை அனுமதிக்கவில்லை.  கடும் வெயிலின் காரணமாக வேறு யாரும் செல்ல விரும்பாத நடுப்பகலில் நான் தனியாக கிணற்றுக்கு செல்ல வேண்டியிருந்தது.

நான் வேத வார்த்தைகளை பற்றி அதிகம் அறியாமல் இருந்திருந்தாலும் என் இருதயம் எப்போதும் தேவனைத் தேடியது. என் வாழ்நாள் முழுவதும், நான் அவரை நெருங்கவிடாமல் தடுக்கும் தடைகளையும், இடைஞ்சல் களையும் மட்டுமே சந்தித்திருக்கிறேன்.  நான் அடிக்கடி இப்படி யோசித்ததுண்டு: “நான் என்ன செய்வது?  ஒரு சமாரியப் பெண் என்ற முறையில் எருசலேம் தேவாலயத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படாவிட்டால் நான் எங்கு சென்று ஜெபிக்க அல்லது வழிபட வேண்டும்? என் வாழ்க்கையில் தேவனின் சித்தம்தான் என்ன?”

ஒரு நாள், நான் தனியாக கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கச் சென்றிருந்தபோது, ​​அவரைப் பார்த்தேன்.  ஆம், நாசரேத்தின் இயேசு எனக்காகக் காத்திருந்தார்.  முதலில் நான் அவர் ஒரு தீர்க்கதரிசி என்று நினைத்தேன், என் பாவங்களுக்காக என்னை அவமானப்படுத்தப் போகிறாரோ என்று நினைத்தேன், ஆனால் இறுதியில், அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்பதை நான் புரிந்துகொண்டேன்.  அவர் மேசியா, என்னிடம் அவரை வெளிப்படுத்துவதற்காகவே அந்த நண்பகலில் அவர் அங்கே வந்தித்திருந்தார்.

கண்டிப்பாக இது தவறுதலாக நடந்திருக்க வேண்டும். ஏன் நான்?  அவருடைய கண்கள் என்னைப் பற்றிய அனைத்தையும் சொன்னது: அவர் என்னை நன்றாக அறிந்திருந்தார், ஆனாலும் அவர் என்னை நிராகரிக்கவில்லை.  மலைகள் அல்லது சடங்குகளுக்கு அப்பால் ஆண்டவருடன் ஒரு ஜீவனுள்ள உறவில் இருக்க முடியும் என்று அவர் என்னிடம் கூறினார், ஏனென்றால் பிதாவானவர் இப்படிப்பட்ட உறவு ஆவியிலும் உண்மையிலும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். (யோவான் 4:20-26).

என் இருதயம் இவ்வளவு மகிழ்ச்சியை  இதற்கு முன்னால் அனுபவித்ததில்லை.  இயேசுவைப் பற்றி எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்ற எனது விருப்பத்தை என்னால் அடக்க முடியவில்லை, அதனால் நான் அவரைப் பற்றி ஊர் முழுவதும் சொன்னேன்.  அன்று முதல் என் வாழ்க்கை முன்போல் இல்லை. என் வாழ்க்கை மாறியது.

என் பெயர் ஃபோட்டினா, நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.

குறிப்பு: அன்பான நண்பரே, ஆண்டவர் உன்னை சந்தித்து தினமும் உன்னிடம் அவரை மேன்மேலும் வெளிப்படுத்த விரும்புகிறார். உன்னைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் அல்லது பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல: அவர் உன்னை ஆழமாக அறிந்திருக்கிறார், நீ இருக்கின்றவாறே உன்னை நேசிக்கிறார், ஏற்றுக்கொள்கிறார். இன்று அவர் முன்னே வா: அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சி உன் வாழ்வில் பெருக்கெடுத்து அவர் உனக்காக திட்டமிட்டிருக்கும் அனைத்தையும் நீ செய்ய உன்னை அசைக்கட்டும். இன்று எந்த வழியில் நீ மற்றவருக்கு ஒரு அசீர்வாதமாக இருக்க முடியும் என்று சிந்தி.

நீ ஒரு அற்புதமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டாய்!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.