• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 18 மே 2023

நாள் 18 : வந்து பார்

வெளியீட்டு தேதி 18 மே 2023

என்னிடம் பல திறமைகள் இருந்தன என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும், ஆனால் சாமர்த்தியம் அவற்றில் ஒன்றாக இருக்கவில்லை. என் பேச்சில் நான் மிகவும் நேரடியானவன், அரை உண்மைகள் எனக்குப் பிடிக்காது என்று என்னை அறிதவர்கள் பலர் என் வாழ்நாள் முழுவதும் என்னிடம் கூறியுள்ளனர்.

இது என் வாழ்நாளில் எனக்கு பல பிரச்சனைகளையும் எதிரிகளையும் உருவாக்கியது.  நான் கட்டிடக் கலைஞராக இருந்த வேலையை இழந்ததற்கு இதுவும் ஒரு காரணம்... என் முதலாளியுடன் நல்ல பேச்சு வார்த்தையில் நான் இல்லை.

பிலிப்பி செசரியா பட்டணத்தில், முதன்முதலான யூத கட்டிடக் கலைஞனாக ஆவதற்கு நான் மிகவும் கடினமாகப் போராடினேன்!  என் கனவு இப்படி எதிர்பாராத விதத்தில் முடிந்ததை என்னால் நம்பவே முடியவில்லை.  ஏமாற்றத்தில் மூழ்கியிருந்த நான், நான் வரைந்த கட்டிட வரைபடங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு கிராமபுரத்திற்கு தனியாக இருக்கச் சென்றேன். ஒரு அத்தி மரத்தடியில் அமர்ந்து ஆண்டவரிடம் என் இருதயத்தைத் திறந்தேன்.  நான் நொறுங்கியிருந்தேன், ஆண்டவர் என் பக்கத்தில் இல்லை என்பது போல் உணர்ந்தேன். என் துக்கத்தில், "உம் முகத்தை எனக்கு மறைக்காதேயும், என்னை நீர் காண்கிறீரா, என் நீர் பார்க்கிறீரா?" என்று உரத்த குரலில் கூவி அழைத்தபடியே கட்டிட வரைபடத் திட்டங்களை எரிக்க ஆரம்பித்தேன்.

என் வேதனையுடன் நான் இருந்தபோது, சில நாட்களுக்குப் பிறகு என் நல்ல நண்பன் பிலிப்பின் எதிர்பாராத வருகை என்னை உற்சாகப்படுத்தியது.  அவன் பல ஆண்டுகளாக யோவான் ஸ்நானகரின் சீடனாக இருந்தான், ஆனால் அவன் சமீபத்தில் நாசரேத்திலிருந்து வந்த இயேசு என்ற மற்றொரு ஆசிரியரைப் பின்பற்றத் தொடங்கினான்.  இது எனக்குப் புரியவில்லை: நாசரேத்திலிருந்து ஏதாவது நன்மையானது வரக் கூடுமா?  பிலிப்பு, அவனுடைய கண்களை என் மீது வைத்த வண்னம், நான் அவனிடம் இதுவரை கண்டிராத உறுதியுடன் கூறினான், "இவர்தான். நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் வருவார் என்று முன்னறிவிக்கப்பட்டவர் இவர் தான்” என்றான்.  “இவரே தான். நாசரேத்தின் இயேசு, யோசேப்பின் மகன்."

வேறு சூழ்நிலையில்,  நான் சென்றிருக்க மாட்டேன். ஆனால் பிலிப்புவின் உறுதிப்பாடு உண்மையில் என் கவனத்தை ஈர்த்தது. இப்படித்தான் நான் அவரைச் சந்தித்தேன்.  அந்த முதல் சந்திப்பில், இயேசு என்னை அறிந்தவர் போல என்னிடம் பேசினார், என் கண்களை நேராகப் பார்த்து, ஆச்சர்யப்படும் விதமாக, அவர் கூறினார், "வந்து பார் என்று பிலிப்பு உன்னை அழைப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நான் உன்னை அறிவேன்.  நீ மனமுடைந்து, தனியாக இருந்தபோது, நான் என் முகத்தை உனக்கு மறைக்கவில்லை, நான் உன்னை அத்தி மரத்தின் கீழே கண்டேன்". (யோவான் 1:43-51)

நான் பேச்சிழந்து நின்றேன்.  மேசியாவைத் தவிர வேறு யாரும் இவற்றை அறிந்திருக்க முடியாது.  அவருடைய பதில் என் இதயத்தை ஆழமாகத் தொட்டது.  என் வாழ்நாள் முழுவதும் நான் தேடிய ஒருவரை நான் கண்டடைந்தேன் என்பதை உணர்ந்தேன், மேலும் அந்த நிமிடத்திலிருந்து அவரைப் பின்தொடர நான் தயாராக இருந்தேன்.

என் பெயர் நாத்தான்வேல், நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.

குறிப்பு: அன்பரே, நீ தனிமையில் இருப்பதாகவும், தேவன் உன் அழு குரலைக் கேட்கவில்லை என்றும் நீ சில சமயங்களில் நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல: அவர் எப்போதும் நீ பேசுவதைக் கேட்கிறார்.  அவர் ஒவ்வொரு கணமும் உன்னிடம் கவனம் செலுத்துகிறார், மேலும் உன் சிக்கலான சூழ்நிலைகளை சரிசெய்ய அவர் விரும்புகிறார். உன் வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்ய ஆண்டவர் விரும்புகிறார்! :-) இன்று, விசுவாசத்தினால் முன்னெப்போதையும் விட அவரைப் பற்றிக்கொள்.  அவர் மீதான நம்பிக்கையில் தான் உனக்கு ஜெயமே!

நீ ஒரு அதிசயமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டாய்!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.