• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 19 மே 2023

நாள் 19 : வந்து என் ராஜ்யத்தைக் கட்டு

வெளியீட்டு தேதி 19 மே 2023

நான் பணிபுரியும் இடத்தில் மேசியாவை கண்டறிவேன் என்று நான் கற்பனை செய்து கூடு பார்த்ததில்லை...  கல் வெட்டும் கொத்தனாராக இருந்த நான், பெதஸ்தா பகுதியில் ஒரு வேலைக்கு அமர்த்தப்பட்டேன்.  இது ஒரு சிறுமையான பொதுப்பணி வேலை, ஆனால் நான் எப்போதும் சொல்வது போல்,  எதுவாக இருந்தாலும் வேலை என்பது வேலை தான், அதற்கான முக்கியத்துவம் என்றும் உண்டு!

அங்கு, வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஒரு தச்சரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது: அவர்தான் நாசரேத்தின் இயேசு.  என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், இயேசு ஒரு வழக்கமான தொழிலாளியைப்போல இல்லை.  அவர் கற்பித்தார், நான் அவர் பேசுவதைக் கேட்டபோது, ​​அவருடைய போதனைகளில் நான் இதுவரை கண்டிராத ஒரு வல்லமையையும் அதிகாரத்தையும் கண்டேன்.

தம்மைப் பின்பற்றும்படி இயேசு என்னை அழைத்த அந்த தருணம் எனக்கு நினைவிருக்கிறது.  அவர் ஒரு நித்திய ராஜ்யத்தை கட்டியெழுப்புவதாகவும், பாறைகளை விட நீண்ட காலம் அது நீடிக்கப்போவதாகவும், நான் அவருடைய சீடர்களில் ஒருவராக இருக்க விரும்புவதாகவும் அவர் என்னிடம் கூறினார்.  எனக்குள் ஏதோ ஆழமாக பற்றி எரிந்தது: அவர்தான் மேசியா என்பதை தெரிந்துகொண்டேன், அதனால் நான் அவர் தந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன்.  இது ஒரு பெரிய சிலாக்கியம்!

விசேஷமான ஒன்றைச் செய்வதற்கு நான் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.  நான் மிகவும் எளிமையான ஒரு நபர்: உண்மையில், நான் கற்களை விட எளிமையானவன் என்றும் கூட சொல்வேன். ஆகையால் அவரைப் பின்பற்றும் இந்த வாய்ப்பை பற்றி என்னால் முழுமையாக வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை.

இது எனது வாழ்க்கையை மட்டுமல்ல, எனது நல்ல நண்பரான சின்ன யாக்கோபு (அல்பேயுவின் குமாரன் யாக்கோபு) உட்பட பலரின் வாழ்க்கையையும் மாற்றியது.  அவரது கதை மிகவும் தனித்துவமானது, அதை நாம் "தெய்வீகத் தொடர்பு" என்றும் அழைக்கலாம்.  சின்ன யாக்கோபு தனது குடும்பத்தினருடன் பேசிய பிறகு, எருசலேம் தேவாலயத்தில் 288 பேர்களின் குரல்களை கொண்ட தேவாலய பாடகர் குழுவில் இணைந்தார்.  நீ நினைப்பது போல், என் நண்பர் நன்றாகப் பாடக்கூடியவர் தான்.

யாக்கோபு எருசலேமுக்குச் செல்லும் வழியில், நாங்கள் அவரை சாலையில் கடந்து சென்றோம். இயேசுவின் தோழியான மகதலேனா மரியாளின் வீட்டில் ஓய்வுநாள் கொண்டாடுவதற்காக நானும் இயேசுவும் அன்று கப்பர்நகூமுக்குச் சென்று கொண்டிருந்தோம்.  நான் யாக்கோபைப் பார்த்ததும், நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டதால், நான் அவரை அன்புடன் ஆரத்தழுவினேன். அப்போது நான் மேசியாவை கண்டறிந்ததாகக் கூறி இயேசுவை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். 

ஆர்வமடைந்த யாக்கோபு எங்களுடன் கப்பர்நகூமுக்கு வரவும், இயேசுவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் முடிவு செய்தார். அவருடைய சீடர்களில் ஒருவராக ஆவதற்கு அவருக்கு அதிக நேரம் எடுக்கவில்லை—என் நல்ல நண்பருடன் சேர்ந்து மேசியாவுக்குச் சேவை செய்வது என்ன ஒரு பாக்கியம்!

என் பெயர் ததேயு, நானும் என் நண்பன், சின்ன யாக்கோபும் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டோம்.

குறிப்பு: அன்பரே, நீயும் ஒருவேளை உன் வாழ்க்கை மிகவும் சாதாரணமானது என்று நினைக்கலாம் அல்லது முக்கியமற்றதாக உணரலாம்.  ஆனால் நீ தேவனுக்கு முக்கியமான ஒரு நபர், உன் வாழ்க்கைக்கான திட்டங்களை அவர் வைத்திருக்கிறார். வேதாகமம் சொல்வதை நினைவில் வை: “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்” (1 கொரிந்தியர் 1:27) கர்த்தருடைய ஒளியால் பிரகாசிக்க நீ தெரிந்துகொள்ளப்பட்டாய்!  இந்த ஒளியைப் பகிர்ந்துகொள்ளவும், ததேயு செய்ததைப் போல உன் நண்பர்களுக்கும் இயேசுவைப் பற்றி சொல்லவும் நான் உன்னை உற்சாகப்படுத்துக்கிறேன்.  உன் அழைப்பிற்காக பல "யாக்கோபுகள்" காத்திருக்கிறார்கள்!

நீ ஒரு அதிசயமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டாய்!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.