• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 2 மே 2023

நாள் 2 : என்னிடத்தில் அடைக்கலம் புகு

வெளியீட்டு தேதி 2 மே 2023

ரோமர்கள் என்னை கப்பர்நகூமில் உள்ள சிவப்பு விளக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள, நகரத்தின் மிகவும் தாழ்வான, மிகவும் பயங்கரமான இடத்திற்குச் செல்ல என்னைக் கேட்ட அந்த நாளில் என் வாழ்க்கை தொடப்பட்டது. இருளின் பிடியில் ஒடுக்கப்பட்டுள்ள லில்லி என்ற பெண்ணுக்கு உதவி செய்யச் செல்லுமாறு என்னிடம் கேட்டார்கள்; அவளைச் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்கனவே கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் அங்கு சென்றதும், அவளுக்கு உதவ எனக்கு தெரிந்த அனைத்து முயற்சிகளையும் செய்தேன், ஆனால் அவை எல்லாம் வீணாகியது. ஆண்டவர் மட்டுமே தலையிட்டு விடுதலை செய்யும் அளவுக்கு அவளில் குடிகொண்டிருந்த இருள் மிகவும் பெரியது என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால் ஒரு கேள்வி என் மனதிலும் எண்ணத்திலும் சுற்றிக்கொண்டே இருந்தது: ஆசிரியர்களுக்கே ஆசிரியரான எனக்கு எப்படி இருளின் மேல் அதிகாரம் இல்லாமல் போனது? நான் எதையாவது செய்யாமல் தவறவிட்டேனோ?

சில நாட்களுக்குப் பிறகு நடந்ததை, நான் என் கண்களால் பார்க்காமல் இருந்திருந்தால் நான் நம்பியிருக்கவே மாட்டேன்: லில்லி இருளில் இருந்து விடுதலையாகி இருந்தாள். அவள் முற்றிலும் வித்தியாசமான நபரைப் போலவும், சமாதானம் நிறைந்தும் இருந்தாள். மேலும் அவளுக்கு ஒரு புதிய பெயர் கொடுக்கப்பட்டிருந்தது : அந்தப் பெயர்தான் மகதலேனாவின் மரியாள்.

நசரேயனாகிய இயேசுதான் இந்த அற்புதத்தை செய்தவர். என் கேள்விகளுக்கு அவரைத் தவிர வேறு யாரிடம் பதில் கிடைக்கும்? அவர் போதனை செய்த பின்னர் ஒரு பக்கவாதக்காரனை திரள் கூட்டத்தினர் முன்பு குணப்படுத்துவதைக் கண்டபோது, ​​என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை: நான் அவருடன் பேச வேண்டியிருந்தது.

ஒரு ரகசிய இடத்தில் தனியே சந்தித்து தாராளமாகப் பேசலாம் என்று என்னை சந்திக்க ஒப்புக்கொண்டார். நான் கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக கேட்க, ​​யூதர்கள் எதிர்பார்ப்பது போன்ற ராஜ்யம் அவருடைய ராஜ்யம் அல்ல என்பதை நான் உறுதியாக உணர்ந்தேன். ரோமானிய சர்வாதிகாரத்திலிருந்து யூதர்களை விடுவிக்க அவர் வரவில்லை - அவர் நம்மை பாவத்திலிருந்தும் அந்தகாரத்திலிருந்தும் விடுவிக்க வந்தார்! அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் ஜீவன் பாய்ந்து ஓடுவதை என்னால் உணர முடிந்தது.

என் வாழ்நாள் முழுவதும் நான் காத்திருந்தது இவருக்காகத்தான் என்று என் இதயம் என்னிடம் கூறியது: வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியா இவரே.

என் உற்சாகத்தில், "குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்"...(சங்கீதம் 2:12a) என்ற சங்கீத வசனம் நினைவுக்கு வந்தது.

நான் மண்டியிட்டு இயேசுவின் கையை முத்தமிட்டேன். பின்னர் அவர் என்னை எழும்பச் செய்து, என் கைகளைப் பற்றி, “அவரிடம் அடைக்கலம் புகுபவர் எல்லோரும் பாக்கியவான்கள்" என்று கூறி, பத்தியை முடித்தார்.(சங்கீதம் 2:12b)

அவருடைய அரவணைப்பு நான் முன் எப்போதும் உணராத தூய்மையான மற்றும் உண்மையான அன்பின் அலைகளைப்போல இருந்தது. அந்த தருணத்தில்தான் நான் அறிந்தேன்: என் வாழ்க்கை இனி ஒருபோதும் அப்படியே இருக்காது. நான் மறுபடியும் பிறந்தேன், எனக்கென்று ஒரு எதிர்காலம் உண்டு.

என் பெயர் நிக்கோதேமு, நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டவன்...

குறிப்பு: அன்பான நண்பரே, இயேசுவே உன் கேள்விகளுக்கு பதில், துன்பங்களில் உன் அடைக்கலம். வரவிருக்கும் நாட்கள் அனைத்திலும், ​​ஜெபத்தின் மூலம் அவருடைய கரங்களுக்குள் வந்து, உன் வாழ்க்கை அவருடைய அன்பினாலும் பிரசன்னத்தினாலும் நிறையட்டும். அவரே உனக்கு அடைக்கலமும், உன் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பவரும்.

நீ ஒரு அற்புதமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டவர்!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.