• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 23 மே 2023

நாள் 23 : அற்புதங்களும் அடையாளங்களும்

வெளியீட்டு தேதி 23 மே 2023

நான் எப்படி உணர்கிறேன் என்பதை ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டும் என்றால், அது "ஆசீர்வதிக்கப்பட்டவள்" என்ற வார்த்தையாக இருக்கும்.

தேவனுடைய குமாரனைப் பெற்றெடுக்க எனக்கு கிருபை கிடைத்ததாக தேவதூதன் எனக்கு அறிவித்ததிலிருந்து, கர்த்தருடைய பரிபூரணமான இரட்சிப்பின் திட்டத்தில் எனக்கும் பங்கு கிடைத்து அவருக்கு சேவை செய்யப்போகிறேன் என்பதை நினைத்து என் உள்ளம் ஆனந்தத்தில் நிரம்பி வழிந்தது. என் உறவினர் எலிசபெத்தை சந்தித்தபோது என் உதடுகளிலிருந்து உதித்த பாடல் இன்னும் நினைவில் இருக்கிறது:

"...அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.” (லூக்கா 1:46-49)

காரியங்கள் சுலபமாக இல்லாவிட்டாலும், இயேசுவோடு இருப்பதும், அவர் வளர்வதைப் பார்ப்பதும் எனக்கு எப்போதும் மிகவும் விலையேறப் பெற்றதாய் இருந்தது!  ஒரு சிறுவனாக இருந்தபோதும், அவரைப் பற்றி பேசக்கூடிய விசேஷமான காரியங்கள் இருந்தன.  எருசலேம் தேவாலயத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கி நியாயப்பிரமாணத்தை நன்கு கற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார், இவ்வளவு சிறு வயதில் அவரது ஞானத்தைக் கண்டு வேதபாரகர்கள் மிகவும் வியந்தனர்!

இருப்பினும் என்னை எப்போதும் தொட்ட ஒரு விஷயம் அவருடைய உள்ளம் தான்.  நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இரட்சகராகிய மேசியாவாக இருந்தாலும் கூட, முடிந்தவரை பலரை ஆசீர்வதிப்பதில் எப்போதும் அவர் கவனம் செலுத்தினார்.  அவர் கானாவூரில் நடந்த திருமணத்தில் தண்ணீரை திராட்சரசமாக மாற்றியது போன்ற வியப்பான அற்புதங்களை செய்வதையும், ஆயிரக்கணக்கான மக்களை குணப்படுத்தி, ஆறுதல்படுத்தி, விடுவித்து மக்களை ஆசீர்வதிப்பதையும்  நான் பார்த்திருக்கிறேன்.

திருமணத்தில் நடந்த அந்த அற்புதம் என்ன ஒரு சிறப்பு!  இயேசு இன்னும் அதிகாரப்பூர்வமாக தனது ஊழியத்தைத் தொடங்கவில்லை, திருமண வீட்டில் திராட்சை ரசம் தட்டுபாடானதால் பலர் அருந்தவில்லை என்று நான் அவரிடம் சொன்னபோது, சுற்றியிருந்த பலரையும் தொட்டு ஈர்த்த ஒரு அதிசயத்தை நிகழ்த்தி அந்த அன்பான குடும்பத்திற்கு அவர் உதவினார்.

அவர் இப்போது வளர்ந்துவிட்டார், ஆகையால் அவர் சிறுபிள்ளையில் இருந்ததுபோல் நான் இப்போது அவருக்குத் தேவையில்லை என்பது உண்மைதான்.  அப்படியிருந்தும், அவர் என்னை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை அவர் எப்போதும் எனக்குத் தெரியப்படுத்துகிறார், மேலும் ஒவ்வொரு முறை நான் அவருக்கு ஏதாவது ஒரு வழியில் சேவை செய்யும்போது நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.

என் பெயர் மரியாள், நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.

குறிப்பு: அன்பரே, மரியாள் செய்தது போல், இயேசுவுக்கு சேவை செய்யும் மகத்தான பாக்கியமும் வாய்ப்பும் உனக்கும் உண்டு.  இந்த நாட்களில், ​​இயேசுவைப் பின்பற்றி, எல்லாவற்றிலும் உன்னால் சிறந்ததை அவருக்கு கொடுப்பதற்கு இன்றே முடிவெடுக்க உன்னை அழைக்கிறேன்.  அவர் இந்த ஆண்டின் மையமாக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்வோம்!

நீ ஒரு அதிசயமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டாய்!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.