வெளியீட்டு தேதி 25 பிப்ரவரி 2024

அன்பரே, நீ உன்னை சாதாரணமான நபராகக் கருதுகிறாயா?

வெளியீட்டு தேதி 25 பிப்ரவரி 2024

இன்று, உனது வாழ்க்கைக்காக ஆண்டவர் வைத்திருக்கும் வாக்குத்தத்தங்களில் நீ முழுமையாக பிரவேசிக்கும்படி உன்னை ஊக்குவிப்பதே எனது இன்றைய நோக்கமாகும்.

ஆண்டவர் ஒரு நல்ல எதிர்காலத்தை உனக்கென வைத்திருக்கிறார். அதை அடைவதற்கான பாதையில் நீ நடக்க உதவும்படி எனது சொந்த அனுபவத்தை நான் உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நான் ஒரு இடத்திற்குப் போகும்படி பயணம் செய்துகொண்டிருந்தபோது, நண்பர்களுடனான ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டேன். அன்று மாலை டாக்டர். ஹென்றி என்ற நபர், "நீ இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து வலையை வீசினால், உன் வாழ்நாள் முழுவதுக்கும் போதுமான அளவு, அசாதாரணமான விதத்தில் மிக அதிகமாகப் பெற்றுக்கொள்வாய்" என்று கூறினார்.

அன்று மாலை, இந்த ஆழமான நம்பிக்கையை ஆண்டவர் என்னுள் வைத்தார்: அவர் சாதாரண மக்களைக் கொண்டு அசாதாரணமான காரியங்களைச் செய்கிறார். இந்த வார்த்தை எனக்கானது என்பதை நான் புரிந்துகொண்டேன். இன்று நான் உனக்குச் சொல்கிறேன்... இந்த வார்த்தை உனக்கானதுதான்!

"கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும் ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்." (ஏசாயா 42:7

எனது 19வது வயதில்,  விசுவாசத்தில் மிகவும் இளமையாக இருந்தபோது, இந்த வசனத்தின் மூலம்தான் தேவன் அவரைச் சேவிக்கும்படி என்னை அழைத்தார். பூமியையும் முழு பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்த ஆண்டவரும், உன் கண்களுக்குத் தெரியும் அனைத்தையும் இருக்கிறவைகளைப்போல அழைத்தவருமான அதே ஆண்டவர்தான், இன்று, அசாதாரணமான ஒரு வாழ்க்கையை நீ வாழ உன்னைத் தெரிந்துகொண்டார் என்று என்னால் உறுதியாக உனக்குச் சொல்ல முடியும்!

"சிறிய" கனவுகளுடன் "சிறிய" வாழ்க்கையை வாழ நீ சிருஷ்டிக்கப்படவில்லை. விஷயங்கள் எப்போதும் சிறியதாகத் தொடங்குகின்றன என்பது உண்மைதான், ஆனால் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கரத்தின் கீழ், அவை யாவும் வளர்ந்து பெருகும்! நமது ஆண்டவர் ஜீவன் மற்றும் பெருக்கத்தின் ஆண்டவராய் இருக்கிறார். மேலும் அவர் தம்முடைய ஜீவனையும், அன்பையும், வல்லமையையும் அறிவிக்க உன்னைப் பயன்படுத்த விரும்புகிறார் என்பதை நான் அறிவேன்.

நீ சாதாரணமான ஒரு நபராக இருக்கிறாய் என்று உணர்வாயானால், என்னிடம் ஒரு நல்ல செய்தி உண்டு: தேவ உதவியுடன், நீ அசாதாரணமாக நடப்பாய்!

Eric Célérier
எழுத்தாளர்