அன்பரே, நீ உன் ஆளுமைத்திறனில் நிபுணத்துவம் உடைய நபரா?
"கிறிஸ்துவின் பிரசன்னம் வெற்றியை அளிக்கிறது" என்ற வெளிப்பாடு உனக்கு இருக்கிறதா?
இயேசுவின் சீஷர்கள் இந்த உண்மையை வெகு காலத்திற்கு முன்பே அனுபவித்தார்கள். ஒரு மீனைக் கூட பிடிக்காமல் ஒரு இரவு முழுவதும் அவர்கள் மீன்பிடிக்கப் பிரயாசப்பட்ட பிறகு, இதோ, இயேசு அவர்களை மீண்டும் மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் செல்லும்படி கேட்டார்! ஆனால் இந்த முறை, அவர்களின் வலை கிழிந்துபோகும் அளவிற்கு அவர்களால் இவ்வளவு பெரிய, திரளான மீன்களைப் பிடிக்க முடிந்தது! (லூக்கா 5:6)
இயேசுவின் பிரசன்னம் எல்லா மாற்றங்களையும் கொண்டுவந்தது என்று நான் நம்புகிறேன். உண்மையில், அவர் வருவதற்கு முன்பு, சீஷர்கள் "இரவு முழுவதும் பிரயாசப்பட்டு உழைத்தார்கள்" (லூக்கா 5:5)
தங்கள் திறமை அனுபவம் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தியிருந்தனர். தங்களது ஆளுகையில் நிபுணத்துவம் பெற்றிருந்தது மட்டுமல்லாமல், மனுஷீக முறைப்படி பேசினால், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் பெற்றிருந்தனர்! அப்படியிருக்க அவர்களுக்குப் பிரச்சனையாய் இருந்தது என்ன?
அவர்களுக்கு ஒரு முக்கியமான காரியம் குறைவுபட்டிருந்தது: அவர்களின் முயற்சிகளில் இயேசுவின் பிரசன்னம் இல்லாமல் இருந்தது. உருவாக்க வல்லமை மிக்க அவரது வார்த்தைதான் அது: "ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்." (லூக்கா 5:4)
அவரது இடைபாடு இல்லாமல் முன்னேற முயற்சி செய்யாதே, அன்பரே... நீ எதுவும் கிடைக்காமல் சோர்வடையும்படி விருதாவாக வேலை செய்யக் கூடும். ஏனென்றால், யோவான் 15:5-ல் வேதாகமம் சொல்வது உண்மை: இயேசு இல்லாமல் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது... என்னாலும் ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால்... இயேசுவோடு இணைந்து, உன்னால் எதையும் செய்ய முடியும்! அவருடன் இணைந்து ஆழமாகவும், தூரமாவும் செல், உன் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியை நீ அடைவாய்! இது எனது ஜெபமும் நான் இன்று உனக்காக அவரிடம் கேட்கும் அதிசயமுமாகும்.
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் என்னை ஒருபோதும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை. என் அம்மா, அப்பா மற்றும் என் முன்னாள் கணவர், "நான் அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு நல்லவளாக" இருப்பேன் என்று நினைக்கவில்லை. உங்களது இனிமையான கருத்துக்கள் என்னை ஊக்குவித்ததோடு, கடந்த வாரம் இரண்டு வேலை வாய்ப்புகளும் எனக்குக் கிடைத்தன. "என் காதுகளில் தொனிக்கும்" பொய்களை அழிக்க எனக்கு உதவுகிறீர்கள். நான் ஆண்டவரை ஒரு தெய்வீகத் தந்தையாக நம்பக் கற்றுக்கொள்கிறேன்... அவர் என் பூமிக்குரிய தகப்பனைப்போலவோ அல்லது முன்னாள் கணவரைப்போலவோ இல்லை. நன்றி, ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக!🙏🏼😇" (மரியாள்)
