• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 2 செப்டெம்பர் 2023

அன்பரே, நீ எதைக் கொடுக்கிறாயோ அதற்கு மதிப்பு உண்டு!

வெளியீட்டு தேதி 2 செப்டெம்பர் 2023

சில நேரங்களில் நாம் தேவனுடைய கரங்களில் மிகச்சிறிய நபராகவும், ஒன்றுக்கும் உதவாத நபராகவும் இருப்பதாக  உணரலாம். இன்னும் சில சமயங்களில், நம்மைச் சுற்றியுள்ள தேவைகளும் உலகத்தின் தேவைகளும் மிக அதிக அளவில் இருப்பதால், “கர்த்தாவே, ஒரு சிறிய மனுஷனாகிய/ மனுஷியாகிய நான் எப்படி இந்த உலகில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரக் கூடும்?” என்று திகைக்கிறோம்.

இருப்பினும், கர்த்தருக்கு சூப்பர் ஹீரோக்கள் தேவையில்லை... உண்மையுள்ள மனிதர்கள்தான் தேவை.

இன்று நீ செய்ய வேண்டும் என்று தேவன் விரும்பும் ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், உனக்கு அருகில் பல ஆண்டுகளாக மனச்சோர்வுடன்‌ இருக்கும் அந்த வயது முதிர்ந்த பெண்மணியைப் பார்த்து புன்னகைப்பதுதான். யாருக்குத் தெரியும், உன் புன்னகை நீ நினைப்பதைவிட அதிகமாய் அந்தப் பெண்மணியை ஊக்குவிக்கக் கூடும்.

ஒருவேளை, இன்று தேவன் உன்னிடம் எதிர்பார்க்கும் ஒரே ஒரு விஷயம்‌, உன் வேலை ஸ்தலத்தில் உன்னால் முடிந்த அளவு சிறப்பாக வேலையைச் செய்ய வேண்டும் என்பதாக இருக்கலாம். அது அந்தத் தொழிலின் நன்மைக்கு எவ்வளவு தூரம் பங்களிக்கும் என்பது யாருக்குத் தெரியும்?

அன்பரே, நீ இருக்கும் இடத்தில், உனக்குக் கொடுக்கப்பட்டவைகளில், நீ உண்மையாக இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே தேவன் உன்னிடம் எதிர்பார்ப்பாரானால் நீ என்ன செய்வாய்?

நீ பெற்றிருப்பதும் நீ கொடுப்பதும் மிகவும் மதிப்பு வாய்ந்தது! "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சலைப் பெறும் உண்மையுள்ள வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதோ பல அற்புதமான சாட்சிகளை உங்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்கிறேன்…

“அனு தினமும் ஒரு அதியசயம் என் ஆத்துமாவிற்கு சத்துவமும், ஊக்கமும், உற்சாகமும் தருகிறது இதை யார் ஆத்துமாக்களைக் குறித்த கரிசனையோடு செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை ஆனால் தேவன் உங்களை அறிந்திருக்கிறார் அவருடைய அபிசேகம் இன்னும் அதிகமாய் ஊற்றப்படுவதாக வல்லமையால் நிறப்பப்படுவீர்களாக என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். கர்த்தர் அப்படியே செய்வாராக. மாத்திரமல்ல இம்மையிலும், மறுமையிலும் மிகுந்த பலனளிப்பாராக. God bless you. God is with you.” (Soundrarajan)

“அனுதினமும் ஒரு அதிசயம்  மூலம் தினமும் தேவன் என்னோடு பேசுகிறதை உணர்கிறேன்.. என்னை நடத்துகிறதை உணர்கிறேன்... என் சுபாவங்கள் மாறுகிறதை உணர்கிறேன்.. நன்றி” (Kavitha B)

“Eric அவர்களுக்கு நீங்கள் அனுப்புகின்ற மின் அஞ்சல் அதில் வருகின்ற கர்த்தர்கியா இயேசு என்னுடன் பேசுக்கிரதை நான் உணர்கின்றன்.. அதில் என் பெயர் சொல்லி அழைத்த அழைப்பு... எனக்கு கர்த்தர் என்பதை ருசித்து பாருங்கள் என்ற வசனம் என் மனதில் கேட்கின்றது.. கர்த்தருக்கா இஸ்தோத்திரம் உண்டாவதாக. ஆமேன்” (Moses)

“எனக்கு தகுந்த வார்த்தைகள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.” (Selvaa P)

“Dear Bro in Christ, Every day I'm reading the Anudhinamum Oru athisayam message today's message touched me a lot. Thank you bless you” (Magimaiboss Ganaprakash)

அன்பரே, நாம் இருக்கும் இடத்தில்‌ உண்மையுள்ளவர்களாக இருப்பதை தேவன் காண்பாராக. அதன்மூலம் அவருக்கு சகல மகிமையும் உண்டாவதாக!

இந்த நாள் உனக்கு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக அமையட்டும்!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.