• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 28 டிசம்பர் 2024

நீ கனவு காண்பதைப்போல் இருக்கிறாயா?

வெளியீட்டு தேதி 28 டிசம்பர் 2024

நாம் இன்னும் அந்த "இடைப்பட்ட" நாட்களில் தான் இருக்கிறோம். ஆண்டு முடிவடையப்போகிறது, ஜனவரி 1ஆம் தேதி அன்று புதிய ஆண்டைத் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன.

எங்களைப் போலவே, ஒரு புதிய தொடக்கத்திற்காக காத்திருந்த ஒருவர்தான் யோசேப்பு. தான் செய்யாத குற்றத்திற்காக அவர் அந்நிய தேசத்தில் அடிமையாக விற்கப்பட்டு, சிறைச்சாலையில் இருந்தார். யோசேப்பின் வாழ்க்கையை ஆதியாகமம் 37, 38,39 வரையுள்ள அத்தியாயங்களில் நாம் வாசிக்கலாம்.

யோசேப்பு சிறுவனாக இருந்தபோது, அவருக்கு எல்லாம் நன்றாகவே நடந்தது. யோசேப்பு அவரது அப்பாவுக்குப் பிரியமான மகனாக இருந்தார், மேலும் அவர் ஆண்டவரிடமிருந்து அற்புதமான சொப்பனங்களைப் பெற்றிருந்தார், அந்த சொப்பனங்கள் ஒன்றில், அவரது முழு குடும்பமும் அவரை வணங்கியது. 

அவரது வாழ்க்கை பல எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டிருந்த பிறகு, யோசேப்பு ஆண்டவர் கொடுத்த சொப்பனங்களுக்கும் அவரது கடுமையான யதார்த்த வாழ்வுக்கும் இடைப்பட்ட நிலையில் சிக்கிக்கொண்டார். இந்த தீமையான விஷயங்கள் அனைத்தும் அவருக்கு ஏன் நடக்கின்றன என்று அப்போது அவருக்குத் தெரியாது, ஆனால் அது ஆண்டவருடைய திட்டத்தின் ஒரு பகுதி என்பதை இப்போது நாம் அறிவோம்: 

"அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான். அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது. கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது." – (சங்கீதம் 105:17-19

அன்பரே உன் வாழ்க்கையில் வரும் எல்லா சோதனைகளையும் உன் நன்மைக்காக பயன்படுத்துவேன் என்று ஆண்டவர் வாக்குத்தத்தம் அளிக்கிறார். அவை ஆண்டவர் வைத்திருக்கும் மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகக் கூட இருக்கலாம். 

"அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." (ரோமர் 8:28)

உன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவும், நீ அனுபவித்த சில சோதனை நேரங்களை நினைவில்கொள்ளவும் நான் உன்னை ஊக்குவிக்கிறேன். அவற்றிலிருந்து இப்போது ஏதாவது நன்மை கிடைத்திருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்.

ஆண்டவருடைய தயவுக்கு நன்றி சொல்ல மறவாதே. 😉

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.