வெளியீட்டு தேதி 21 செப்டெம்பர் 2023

அன்பரே, நீ சமாதானத்தையும் அன்பையும் சுமந்து செல்லும் நபர்

வெளியீட்டு தேதி 21 செப்டெம்பர் 2023

இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்: நீ இருக்கும் அறைக்குள் ஒருவர் நுழைகிறார், ஒரு நொடியில், அங்கு நிலவிய சூழ்நிலை மாறுகிறது... திடீரென்று, அந்தச் சூழல் இலகுவாகிறது, அதிக சமாதானமுள்ள சூழலாகவும், நிதானமான சூழலாகவும் மாறுகிறது. இப்படி உனக்கு எப்போதாவது நடந்திருக்கிறதா?

என் நண்பனே/தோழியே, இந்த நபர் நீதான்! "சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்."  (வேதாகமத்தில் மத்தேயு 5:9ஐப் பார்க்கவும்) 

ஆண்டவருடைய ஒரு பிள்ளையாக, மக்களைச் சுற்றி சந்தோஷத்தைக் கொடுப்பவர்களிலும் சமாதானத்தைப் பரப்புபவர்களிலும் நீயும் ஒரு நபராய் இருக்கிறாய். நீ சமாதானப் பிரபுவை சுமந்து செல்லும் நபராக இருப்பதால், அவருடைய சுபாவம் உன் மூலம் வெளிப்படுகிறது!

இன்று, நீ எங்கிருந்தாலும் சரி அல்லது எங்கு சென்றாலும் சரி, ராஜாதி ராஜா உன்னோடு கூட இருக்கிறார்.

அன்பரே, ஒரே ஒரு வார்த்தையால், ஒரு கரிசனமுள்ள செய்கையால் அல்லது ஒரு புன்னகையால் உன்னால் மற்றொரு நபரை ஆசீர்வதிக்க முடியும் என்பதை அறிந்து கொள்!

இதோ, இன்றைய நாளுக்கான ஒரு யோசனை... அன்பான ஒரு வார்த்தை, சேவை செய்யும் ஒரு செயல், ஈடு கொடுத்து கேட்கும் காது போன்றவற்றின் மூலம் ஆண்டவருடைய அன்பை வெளிப்படுத்தத் தீர்மானி. பரிசுத்த ஆவியானவர் உன்னை நடத்துவதற்கு அனுமதி... அவர் எப்போதும் அற்புதமான யோசனைகளைத் தருபவர்! நீ விரும்பினால், மற்ற சகோதர சகோதரிகளும் நடைமுறைச் சைகை மூலம் ஆண்டவருடைய அன்பை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படும்படிக்கு, எனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை இடுவதன் மூலம் உன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள உன்னை அழைக்கிறேன்.

இந்த நாள் உனக்கு அழகானதும் ஆசீர்வதிக்கப்பட்டதுமான நாளாக அமைவதாக அன்பரே!

Eric Célérier
எழுத்தாளர்