நீ தனியாக இல்லை!
எங்கு பார்த்தாலும், வண்ணமயமான பண்டிகை விளக்குகள் பளிச்சென ஒளி வீசி மிளிர்கின்றன, அடுமனைகளில் விதவிதமான பலகாரங்கள் செய்யும் வாசனை காற்றில் வீசுகிறது. மேலும் பல வாரங்களாக, கிறிஸ்துமஸ் கேரல் பாடல் குழுக்கள் வீடு வீடாக வளம் வந்து கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாட தொடங்கிவிட்டனர். இந்த கேரல் பாடல்கள் ஒவ்வொன்றும் அதற்கு முந்தியதை விட இன்னும் சிறப்பானதாகத் தெரிகிறது. இந்த வருடம் நம் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தை உயர்த்தும் இந்தப் பாடல் வரிகளை (மீண்டும்) ஆராய்ந்து பார்த்து ஆண்டவரைத் துதிக்க விரும்புகிறேன்.
இந்த வார்த்தைகளை ஒருவேளை நீ அறிந்திருக்கலாம்:
“இம்மானுவேலே வாரும், வாருமே,
மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே;
மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்
மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே,
இம்மானுவேலின் நாள் சமீபமே.”
வேதாகமத்தில் இயேசுவுக்குப் பல நாமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்:
அற்புதர்
ஆலோசனை கர்த்தர்
தேவ ஆட்டுக்குட்டியானவர்
ஆல்பா மற்றும் ஒமேகா
நல்ல மேய்ப்பன்
சர்வவல்லமையுள்ள தேவன்
விடிவெள்ளி நட்சத்திரம்
தேவ குமாரன்
யூத ராஜ சிங்கம்
உலகின் மெய்யான ஒளி
ஜீவ வார்த்தை
சமாதான பிரபு
ராஜாதி ராஜா
கர்த்தாதி கர்த்தர்
மத்தேயு 1:23ல் நீ வாசிக்கிறபடி இயேசுவுக்கு "இம்மானுவேல்" என்ற அழகான பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது.
எத்தனை ஆழமான இரகசியம் இது, எவ்வளவு எல்லையில்லா கிருபை இது! இயேசுவின் மூலம் தேவன் நம்மோடு இருக்கிறார்! அவர் நம்மை மீட்கிறார், நம்மை சிறைபிடித்து வைத்திருக்கும் எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கிறார். நம்மைத் தரையில் விழ வைத்து, கட்டிவைக்க முயற்சிக்கும் ஆதிக்கங்கள் அனைத்தையும் அவர் அழிக்கிறார். இம்மானுவேலுடன் இணைந்த நமது வாழ்க்கை இனி தனிமையின் வாழ்க்கை அல்ல! நாம் தனியாக இல்லை, நாம் ஒருபோதும் தனியாக இருக்க மாட்டோம், ஏனென்றால் அவர் ஒவ்வொரு நாளும், உலகத்தின் முடிவு வரை நம்முடன் இருக்கிறார்.
இன்று எப்படிப்பட்ட கவலைகள் உன்னைக் கலங்க வைத்திருந்தாலும் சரி, இயேசு உனக்கு அருகில் இருக்கிறார், அவருடைய அன்பிலிருந்து ஒருபோதும் உன்னை எவராலும் பிரிக்க முடியாது! உன் கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்துவிடு, அவர் உன்னை எப்படிப் பார்த்துக்கொள்கிறார் என்பதை அப்போது நீ காண்பாய்.
