• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 25 நவம்பர் 2024

அன்பரே, நீ நிதானமாக இருக்கிறாயா?

வெளியீட்டு தேதி 25 நவம்பர் 2024

பொதுவாக, நமது  சரீரப்பிரகாரமான வாழ்க்கையைப்போலவே, ஆவிக்குரிய வாழ்க்கையும் இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கையானது ஒரு பைக் ஓட்டுவதைப் போன்றது: எப்படி நிதானமாக இருக்க வேண்டும் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்! அந்த விஷயத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது, நிதானமாக சமநிலையில் இருக்க, நீ தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை கவனித்திருக்கிறாயா? அதைப் பற்றி தியானிக்க உன்னை அழைக்கிறேன்.

பிரசங்கியின் புத்தகம் வாழ்க்கையில் சமநிலையைப் பேணுவது பற்றி பல விஷயங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அது இவ்வாறு கூறுகிறது: "ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு." (பிரசங்கி 3:1-8

எனவே, அன்பரே, ஒவ்வொன்றிற்கும் ஒரு நேரம் உண்டு:

  • ஆண்டவருடைய வார்த்தையைப் படிக்க ஒரு நேரம் உண்டு, ஒரு நல்ல புத்தகத்தை வாசித்து ஓய்வெடுக்க‌ ஒரு நேரம் உண்டு.
  • ஜெபிக்க ஒரு நேரம் உண்டு, உனக்குப் பிடித்த நபர்களுடன் பேச ஒரு நேரமுண்டு.
  • திருச்சபைக்குச் செல்ல ஒரு நேரமுண்டு, விடுமுறைக்கு செல்ல ஒரு நேரம் உண்டு!

வைராக்கியமாக இருப்பதும் "லாபமான அனைத்தையும் குப்பையென்று எண்ணுவதும்" மிகவும் அவசியம் என்று நினைப்பவர்களில் நீயும் ஒரு நபராக இருக்கலாம். (1 தீமோத்தேயு 4:8) நீ சொல்வது சரிதான்! இருப்பினும், நாம் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறிச் செல்லும்போது, விழுந்துபோவதற்கான கண்ணிகளில் சிக்க வாய்ப்புகள் உள்ளன.

உனக்கு நீயே அதிகமான கோரிக்கைகளை வைத்துக்கொள்வதும், மிகவும் சட்டப்பூர்வமாகவே எல்லாவற்றையும் செய்வதும், உன்னை மகிழ்ச்சியற்ற நபராக மாற்றி, விரக்தியில் வாழ வைப்பது மட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவருடைய இருதயத்திலிருந்து உன்னைத் தூரமாக விலகச் செய்யும் ஆபத்தும் உனக்கு ஏற்பட்டுவிடும். “நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்” அவர் ஒருவரே ஆவார். (1 தீமோத்தேயு 6:17)

அன்பினால் நாம் ஆண்டவருக்கு அருகில் நெருங்கிச் செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார், ஆனால் உன்னையும் அறியாமலேயே, நீ ஆண்டவருடனான உன் உறவை ஒரு மதக் கடமையாக ஆக்கிக்கொள்ளலாம். தம்மை முழு மனதுடன் தேடுபவர்கள் தம்மைக் கண்டுபிடிக்க அவர் உதவுகிறார். (எரேமியா 29:13)

அன்பரே, இன்று, ஆண்டவர் உனக்குத் தாராளமாகக் கொடுக்கும் வாழ்க்கையை அனுபவிக்க உன்னை அழைக்கிறார். அவர் உனக்குக் கொடுக்கும் ஈவுகளை முழுமையாக அனுபவிப்பது அவரைப் பிரியப்படுத்துகிறது மற்றும் கனம்பண்ணுகிறது! நீ கொடுத்த பரிசை ஒதுக்கி வைத்துவிட்டு, உன் குழந்தை வீட்டுப்பாடம் செய்வதற்காகச் சென்றால், அக்குழந்தையின் பெற்றோராக, நீ எப்படி நடந்துகொள்வாய்? உன்னை அது சற்று காயப்படுத்தாதா? மேலும், "கண்ணே, உன் பரிசை வைத்து விளையாடு, வீட்டுப்பாடத்தைப் பின்பு செய்துகொள்ளலாம். ஒவ்வொன்றிற்கும் ஒரு நேரம் உண்டு" என்று நீ சொல்ல விரும்புகிறாயா?

தாவீது ராஜாவைப்போல, உண்மையுடனும் வெளிப்படையான இதயத்துடனும் ஜெபிக்க நான் உன்னை ஊக்குவிக்கிறேன்… “தகப்பனே, உமது பரிசுகளுக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியாமல் இருந்த காலங்களை எனக்கு மன்னிப்பீராக. நீர் உருவாக்கும் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் அனுபவிக்க எனக்குக் கற்றுத் தருவீராக. உம்முடனும் மற்றவர்களுடனும் மகிழ்ச்சியான வாழ்வை வாழத் தேவையான நிதானத்தைக் காத்துக்கொள்ள எனக்கு ஞானத்தைக் கொடுப்பீராக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

ஆம், தேவனுடைய பிள்ளைகள், அவர் அளிக்கும் சகல நன்மைகளையும் அனுபவிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: "பாஸ்டர் எரிக், 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சல் இப்போது எனக்கு ஒரு வீடாக இருக்கிறது. உங்களது வார்த்தையால் நான் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறேன். நான் ஆண்டவரது வார்த்தைகளை ஏற்கனவே கேட்டிருக்கிறேன், ஆனால் இந்தத் தளத்தை நான் கண்டுபிடித்த தருணத்திலிருந்து, நான் என்னைப் புதிய நபராகக் காண்கிறேன்! நான் புதிய நபராக இருப்பதால் உங்களது செய்தி எனது குடும்பத்திற்கும் பயனளிக்கிறது. நிச்சயமான வழியை உண்மையிலேயே எனக்குக் காட்டியதற்காக ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!”  (ஜெய், ஊட்டி) 

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.