நீ நம்புகிற நபரைக் குறித்து எச்சரிக்கையாய் இரு, சாத்தான் கூட😈ஒரு காலத்தில் தேவதூதனாக 😇இருந்தான்
நீ ஆண்டவர் மீது விசுவாசம் வைக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் வலியுறுத்தாமல் இருக்க முடியாது. அவருடைய ஊழியர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் மீது நீ நம்பிக்கை வைத்திருக்கலாம், ஆனாலும் நீ சர்வவல்லமையுள்ள ஆண்டவர் மீதே உன் நம்பிக்கையை வைக்க வேண்டும்.
ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பது எப்படி என்று நீ கேட்கலாம். இதற்கான பதில் மிகவும் எளிது: அவரை விசுவாசிப்பதன் மூலம் நம்பிக்கை வைக்கலாம்!
"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது" (எபிரெயர் 11:1)
ஒரு வேடிக்கையான உண்மை: எங்கள் திருமண அழைப்பிதழ்களில் அச்சிடப்பட்ட வசனம்தான் இது!
ஒரு நாள், நெரிசல் நிறைந்த ஒரு வீட்டில் இயேசு உபதேசித்துக் கொண்டிருந்தபோது,வீட்டுக்கூரையின் மேல் ஒரு ஆரவாரத்தைக் கேட்டார். திமிர்வாதக்காரனான ஒருவனை அவருக்கு முன்பாக இறக்கி வைப்பதற்காக சிலர் கூரைகளைப் பிரித்துக்கொண்டிருந்தனர். வீட்டின் கூரை திறந்து கிடப்பதையும், ஒரு பாய் கீழே இறங்கி வருவதையும் இயேசு பார்த்தார், பின்னர் அவர் கிரியை செய்யும் முன்பு அவர் தேடிக்கொண்டிருந்த ஒன்றைக் கண்டார்: அதுதான் அவர்களது விசுவாசம் (லூக்கா 5:20)
அந்த நபர், தன்னை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வருவதற்கு, தனது நண்பர்களை நம்பியிருந்தான், ஆனால் அவனது நண்பர்களோ அவன் குணமடைவதற்கு இயேசுவின் மீது விசுவாசம் வைத்திருந்தனர்.
உன் வாழ்க்கையில் உனக்கு இருக்கும் உண்மையான கிறிஸ்தவர்கள், அவர்கள் உன் நண்பர்களாக இருந்தாலும் சரி, குடும்பத்தினராக இருந்தாலும் சரி, அல்லது தலைவர்களாக இருந்தாலும் சரி, லூக்கா 5வது அத்தியாயத்தில் உள்ள நண்பர்களைப் போலவே உனக்கும் செய்ய வேண்டும்: 'உன்னை உற்சாகப்படுத்தவும் இயேசுவின் மீது விசுவாசம் வைக்கவும் உன்னை ஊக்குவிக்க வேண்டும்.’
மக்கள் மீது நாம் அதிக நம்பிக்கை வைக்கக் கூடாது என்று வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது:
“பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்." (சங்கீதம் 146:3)
அதற்குப் பதிலாக:“கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.” (எரேமியா 17:7-8)
அன்பரே, இன்று நீ கர்த்தரிடத்தில் கேள்:
- ஆண்டவர் மீதான உன் விசுவாசத்தைப் பெருகப் பண்ணும்படி கேள்.
- உன் விசுவாசம் எந்தெந்தப் பகுதிகளில் இன்னும் வளர வேண்டும் என்பதைக் காண்பிக்கும்படி கேள்.
- உன் வாழ்க்கையில் நீ நம்பக்கூடாத நபர்களை உனக்கு வெளிப்படுத்தும்படி கேள்.
நான் உனக்காக ஜெபிக்கிறேன்: “ஆண்டவரே, அன்பரே தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருக்க, உம்மில் பாதுகாப்பாக வேரூன்றச் செய்வீராக. உம் மீது மட்டுமே விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வைக்க அன்பரேக்கு உதவுவீராக!”
