வெளியீட்டு தேதி 27 ஆகஸ்ட் 2024

அன்பரே, நீ நாளைய தினத்தைக் குறித்து பயப்படுகிறாயா?

வெளியீட்டு தேதி 27 ஆகஸ்ட் 2024

நாளை தினத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது, அப்படித்தானே? எனக்குத் தெரியாது என்றோ அல்லது தெரியும் என்றோ நாம் சொல்லலாம்! ஆண்டவருக்குத் தெரியும். ஆனால் நமக்குத் தெரியாது. நாளை என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாததால் நாம் பயப்படலாம். நமக்குத் தெரியாதது நம்மை பயமுறுத்துகிறது.

இது முதல் முறையாக உனக்குத் தெரியாத சாலையில் இரவு நேரத்தில் ஒரு வாகனத்தை ஓட்டுவது போன்றது. அது உனக்கு பயத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால்... உன் காரின் ஹெட்லைட்கள் பாதுகாப்பாக நீ முன்னோக்கிச் செல்வதற்குப் போதுமான தூரத்தைப் பார்க்க உனக்கு உதவுகிறது என்பதும் உண்மைதான். ஒரு விதத்தில், இயேசுவும் அப்படித்தான் நம்மோடு இருக்கிறார்!

அவர் ஒவ்வொரு நாளும் உன்னோடு இருந்து, உன்னை வழிநடத்திச் செல்லும் ஒளியாக இருக்கிறார். நீ கடினமான எதையும் சந்திக்க மாட்டாய் என்பது அதன் அர்த்தமல்ல. மாறாக, இயேசு உன்னோடு இருக்கிறார், உனக்காக வடிவமைக்கப்பட்ட மற்றும் எழுதப்பட்ட ஒவ்வொரு நாட்களையும் அவர் அறிந்திருக்கிறார் என்பதுதான் அதன் அர்த்தமாகும்.  (சங்கீதம் 139:16

இயேசுவைப் பொறுத்தவரை, இவை அனைத்தும் விசுவாசம் மற்றும் உடன்படிக்கையுடன் தொடர்புடைய விஷயங்கள். உன்னுடைய ஜீவனை இரட்சிக்கும்படிக்கு அவர் தமது ஜீவனைக் கொடுத்தார்! பரலோகத்தை நோக்கிய பயணத்தில் பாதிவழியில் கைவிட்டுவிட அவர் உன்னை நரகத்திலிருந்து வெளியே கொண்டுவரவில்லை.  :-)

ஆண்டவர் உன்னை கவனித்துக்கொள்வதாக வாக்குப்பண்ணியுள்ளார்... ஆகவே, அன்பரே, நீ ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை! 

"உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.” (மத்தேயு 6:28-34)

அன்பரே, கர்த்தருடைய அன்பினால் நான் உன்னை நேசிக்கிறேன். கர்த்தர் உனக்கு மிகவும் அருகில் இருக்கிறார், அவர் உன்னை கவனித்துக்கொள்வார் என்று நான் நம்புகிறேன்.

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எனக்கு ஒரு அதிசயம் நடந்தது என்று நம்புகிறேன். எனது பொருளாதார பிரச்சினையில் எனக்கு உதவுமாறு இரட்சகராகிய ஆண்டவரிடம் நான் நீண்ட காலமாக ஜெபித்து வந்தேன், எனது வீட்டைக் காப்பாற்ற எனக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. நான் மிகவும் அவிசுவாசத்தோடு இருந்தேன், எனக்கு எதிர்மறையான எண்ணங்களே இருந்தன.  உங்கள் மின்னஞ்சல்களை வாசித்து, ஜெபித்ததும் விசுவாசித்தேன். அதுதான் என் குழந்தைகளுக்காக என் உயிரைக் காப்பாற்றியது. என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நான் மிக்க நன்றி தெரிவிக்கிறேன்.” (ஹெலன், அரியலூர்)

Eric Célérier
எழுத்தாளர்