வெளியீட்டு தேதி 22 நவம்பர் 2023

அன்பரே, நீ மீண்டும் சிறுபிள்ளையாக மாறினால் எப்படி இருக்கும்?

வெளியீட்டு தேதி 22 நவம்பர் 2023

ஒரு சிறு பிள்ளை எவ்வளவு எளிமையாக இருக்கிறது என்பதையும், தன் வாழ்க்கையை மிகவும் சிக்கலானதாக ஆக்கிக்கொள்ளாமல் இருக்கிறது என்பதையும் நீ கவனித்திருக்கிறாயா? சில சமயம் நாம் அவர்களின் இளமையைக் குறித்துப் பொறாமைப்படுகிறோம் அல்லவா?

இயேசு சிறு பிள்ளைகளை மிகவும் நேசிக்கிறார். இயேசு இவ்வுலகில் ஊழியம் செய்தபோது, சிறு பிள்ளைகளைத் தம் கரங்களில் ஏந்தி அவர்களை ஆசீர்வதித்தார்.  (பரிசுத்த வேதாகமத்தில் மாற்கு 10:16ஐ வாசித்துப் பார்க்கவும்.)

தேவ ராஜ்யத்தில் யார் பெரியவராக இருப்பார்கள் என்று சீஷர்கள் இயேசுவிடம் கேட்டபொழுது,  சிறு பிள்ளைகள் போன்றவர்கள்தான் பெரியவர்களாக இருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை உதாரணமாகக் காண்பித்தார். (பரிசுத்த வேதாகமம், மத்தேயு 18:1‭-‬4)

“இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்" என்று இயேசு சொன்னார்.

நீ தாழ்மையாய் இருப்பதற்கு இயேசு உன்னை ஊக்குவிக்கிறார்… தாழ்மை தேவனுடைய கண்களில் மிகவும் விலையேறப்பெற்றது. இதற்கு மாறாக, பெரியவனாக இருக்க வேண்டும் அல்லது எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மைப் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கவிடாமல் தடைசெய்கிறது.

இன்று, உன்னை விட உருவத்திலோ வயதிலோ சிறியவர்களாய் இருப்பவர்களை நோக்கிப் பார்… தேவன் விரும்புகிறதும் மற்றவர்களை உயர்த்துகிறதுமான இந்தத் தாழ்மையை உனக்குள் வளர்த்துக் கொள்.

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: "’அனுதினமும் ஒரு அதிசயம்’ என்னும் இந்த மின்னஞ்சலானது நான் ராஜாவின் பிள்ளை என்பதை தினந்தோறும் எனக்கு  நினைவுபடுத்துகிறது… நான் ஆக்கினைத்தீர்ப்புக்கு உட்பட்டு வாழ வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் அவருடைய கிருபை என்னைச் சுற்றிலும் பாதுகாப்பாய் இருக்கிறது…”  (பெஞ்சமின்)

Eric Célérier
எழுத்தாளர்