வெளியீட்டு தேதி 29 நவம்பர் 2024

நீ விசேஷித்த மற்றும் விலையேறப்பெற்ற நபர் ⭐️

வெளியீட்டு தேதி 29 நவம்பர் 2024

நீ எப்போதாவது உன்னைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களுக்கு இடமளித்திருக்கிறாயா? அப்படியானால்,  அன்பரே, நீ ஆண்டவருடைய பார்வையில் எவ்வளவு விலையேறப்பெற்ற நபர் என்பதை இந்த சிறிய வசனத்தின் மூலம் நான் உனக்கு நினைவூட்ட விரும்புகிறேன்: "நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்." (1 கொரிந்தியர் 7:23

தகுதியற்ற ஒருவருக்காக ஆண்டவர் தம்முடைய ஒரேபேரான குமாரனை பலியாக ஒப்புக்கொடுத்தார் என்று நீ உண்மையிலேயே நினைக்கிறாயா? நிச்சயமாக இல்லை! இயேசு உன்னை இரட்சிக்கவே மிக அதிக விலைக்கிரயம் செலுத்தினார்: அவருடைய விலையேறப்பெற்ற இரத்தம் சிலுவையில் சிந்தப்பட்டது.

அன்பரே,

  • கடந்த காலங்களில் உன்னை இழிவுபடுத்தும் மற்றும் அவமானப்படுத்தும் வார்த்தைகள் உனக்கு விரோதமாக சொல்லப்பட்டதா?
  • நீ இப்படிப்பட்ட நபர் என்று மற்றவர்கள் உன்னை முத்திரை குத்திவிட்டார்களா?
  • நீ சில சமயங்களில் கேலிபண்ணத்தக்க தோற்றம் அல்லது பரியாச வார்த்தைகளுக்கு இலக்காகியிருக்கிறாயா?

எனது மின்னஞ்சல் வாசகர்களில் ஒருவர் தனது அனுபவத்தை என்னோடு இவ்வாறு பகிர்ந்துகொண்டார்: “கர்த்தர் எனக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை குறைத்து மதிப்பிடாமல், என்னை நம்புவது எனக்குக் கடினமாய் இருப்பதுதான் எனக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. நான் சிறுவனாக இருப்பதால், ‘ஓரளவே உன்னால் செய்ய முடிகிறது,’ ‘பரவாயில்லாமல் சராசரியாக செய்கிறாய்,’ ‘இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்’ என்பன  போன்ற வார்த்தைகளை மட்டுமே நான் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் இந்த எதிர்மறையான வார்த்தைகளை எதிர்த்துப் போராடி முன்னேறிச் செல்ல விரும்புகிறேன்."

ஒருவேளை நீ தொடர்ந்து அதிகமான காரியங்களைச் செய்ய பாடுபட்ட பின்பும், மற்றவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம்.

ஆண்டவர் உன்னை நேசிப்பதுபோல், நீயும் உன்னை நேசிக்க வேண்டிய நேரம் இது. இந்த எதிர்மறையான எண்ணங்களையும் இழிவான எண்ணங்களையும் விரட்டியடிக்க வேண்டிய நேரம் இதுவே. சிலுவையில் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தின் விலைக்கிரயத்தை நினைத்து நீ அவருக்குச் சொந்தமான நபராக இருக்க முடியும்! அவர் உன்னை அன்பினால், அசாதாரண ஆற்றலுடன் சிருஷ்டித்தார்.

நீ அவர் மீது அளவிட முடியாத மதிப்பு வைத்திருக்கிறாய். நீ விசேஷித்த நபர் மற்றும் அற்புதமான நபர்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “தினமும் இந்த மின்னஞ்சலை அனுப்பியதற்கு நன்றி. எனக்கு வந்த முதல் செய்தியே என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. ‘நீ ஒரு அதிசயம்’ என்று இதுவரை யாரும் என்னிடம் சொன்னதில்லை. அதுதான் தினமும் நான் கேட்க வேண்டிய செய்தி. என் மீதான உங்களது அக்கறைக்கு நன்றி” (சிந்தியா, நாமக்கல்)

Eric Célérier
எழுத்தாளர்