வெளியீட்டு தேதி 12 ஆகஸ்ட் 2024

அன்பரே, நீ வெற்றியடையப் போகிறாய்...!

வெளியீட்டு தேதி 12 ஆகஸ்ட் 2024

வாழ்வின் உபத்திரவங்களுக்கு மத்தியில் வலிமையாகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும் என்று சொல்லி நாம் தியானித்துக்கொண்டிருக்கும் நமது 7 நாள் தொடரை இன்று நிறைவு செய்கிறோம்.

“நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." (யோசுவா 1:9)

நீ எடுக்கும் முயற்சிகளை ஆண்டவர் ஆசீர்வதிக்க விரும்புகிறார். ஆண்டவர் தயவு காட்டுபவர்; நீ எங்கு சென்றாலும் சரி, நீ என்ன செய்தாலும் சரி, எல்லாவற்றிலும் உன்னை வெற்றி பெறச்செய்வார்!

ஆண்டவர் உனக்குள் வைத்துள்ள சொப்பனங்களை நீ வாழ்ந்துகாட்டுவதாகக் கற்பனை செய்யத்தொடங்கு. அவற்றை நிறைவேற்ற அவர் உனக்கு வலிமையையும் தைரியத்தையும் தருவார்.

அவருடைய வார்த்தையில் நாம் இதை வாசிக்கிறோம், “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; ...” (பிரசங்கி 9:10)

செயலில் இறங்குவது மிகவும் முக்கியம், ஏனென்றால் செயலற்ற நிலையில் இருக்கும் ஒருவரை வைத்து ஆண்டவரால் எதுவும் செய்ய முடியாது. மறுபுறம், ஒருவர் தவறான திசையில் முன்னோக்கிச் சென்றாலும் கூட, ஆண்டவரால் அவரைத் திசை திருப்பிவிட முடியும். ஏனென்றால், நீ நகரத் தொடங்கும்போது, ​கர்த்தர் உன்னுடன் வருகிறார். ஆம், எப்போதும் நகர்ந்து சென்று கொண்டே இரு, கர்த்தரின் கரம் எப்போதும் உன்னை வழிநடத்தும்!

கர்த்தர் மீண்டும் இந்த அற்புதமான வாக்குத்தத்தத்தை உனக்குத் தருகிறார்: "கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.” (உபாகமம் 28:8)

நீ எங்கு சென்றாலும், ஆசீர்வாதம் உன்னைப் பின்தொடர்ந்து வரும். அதைப் புரிந்துகொள், நம்பு, காட்சிப்படுத்து, ஒப்புக்கொள், அதை வாழ்ந்துகாட்டு.  கவனமாக இரு, அவருக்கு சேவை செய், முன்னேறிச்செல். ஆண்டவர் வாக்குப்பண்ணியிருக்கிறார்... அவரது ஆசீர்வாதங்கள் உன்னைத் தொடரும்!

இதை நினைவில்கொள்: ஆசீர்வாதத்தின் ஆண்டவர் உன்னோடு இருப்பதால், ஆண்டவருடைய ஆசீர்வாதம் உனக்கு இருக்கிறது.

அன்பரே, ஒன்றாக சேர்ந்து ஜெபிப்போம்: “ஆண்டவரே, இன்று நான் உறுதியான முடிவை எடுத்து முன்னேறிச்செல்ல விரும்புகிறேன். ஆம், நான் செயல்பட விரும்புகிறேன். எனது வாழ்வில் இலக்கை நோக்கி அடுத்த அடியை எடுத்துவைக்க எனக்கு உதவுவீராக. உமது பிரசன்னத்திற்கும், உமது வார்த்தைக்கும், உமது ஆசீர்வாதத்திற்கும் நன்றி.  இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கான பலத்தை எனக்குத் தந்தமைக்காக நான் ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன். நான் நிறைய மனச்சோர்வை சந்தித்திருக்கிறேன். என்னைச் சுற்றியுள்ள இந்த உலகில் பலமுள்ள நபராக இருக்க விரும்புகிறேன். இந்தச் செய்திகளை வாசிப்பதன் மூலம், ஆண்டவர் மீது கவனத்தை வைக்கவும், என் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவும், நம்பிக்கையாய் இருக்கவும் மற்றும் பலமுள்ள நபராய் வாழவும் முடிகிறது, எல்லாவற்றிற்கும் மேலாக நான் வாழ விரும்புகிறேன்.  இந்த பூமியில் என் பொறுப்பை நான் இன்னும் நிறைவேற்றவில்லை என்பது எனக்குத் தெரியும்!” (ரீட்டா)

Eric Célérier
எழுத்தாளர்