• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 22 மே 2024

அன்பரே, நீ முன்னேற முடியாதபடிக்குத் தடைகளை உணர்கிறாயா?

வெளியீட்டு தேதி 22 மே 2024

மின்னஞ்சல் வாசகர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களையும் கருத்துக்கணிப்புகளையும் வாசிக்கும்போது,​“என்னால் முன்னோக்கிச் செல்ல முடியவில்லை என உணர்கிறேன்,” “எனது தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேறுவது என்பது எனக்கு மிகப்பெரிய சிரமமாய் இருக்கிறது,” “நான் ஆண்டவரில் வளரவில்லை என்பது எனக்குத் தெரிகிறது,” “எனக்காக ஜெபியுங்கள், நான் முன்னர் ஆண்டவரோடு நெருங்கி ஜீவித்ததைப்போல, இப்போது வாழ விரும்புகிறேன்,” “எனது திட்டங்கள் தடைபட்டதுபோல் இருக்கிறது, மேலும் எனக்குத் தெளிவான வழி கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்பன போன்ற பல பதில்களை நான் கவனித்திருக்கிறேன். இந்த விரக்தி நிறைந்த பதில்களை நான் உண்மையில் புரிந்துகொள்கிறேன். இனி வரவிருக்கும் நாட்களில், "ஆண்டவருக்காக நிற்காமல் ஓடுவது எப்படி" என்ற தொடரில், உன் கிறிஸ்தவ வாழ்க்கையிலும், ஆண்டவர் உனக்காக வைத்திருக்கும் திட்டங்களிலும் முன்னேறுவதற்கான பல திறவுகோல்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென என் இருதயத்தில் வாஞ்சிக்கிறேன்!

இந்த வல்லமை வாய்ந்த வசனம் உனக்குத் தெரியுமா? “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்." (2 சாமுவேல் 22:30)  

இந்த வார்த்தைகளை எழுதியவரான தாவீது, ஒரு சாதாரண மேய்ப்பனாக இருந்து இஸ்ரவேலுக்கு ராஜாவாக மாறினார். இந்த தாவீதின் வாழ்க்கையும் எதிர்கால நம்பிக்கையும்தான் பல ஆண்டுகளாக தடையை சந்தித்து வந்தன.

தாவீதும் கூட தடைகளையும் ஏமாற்றங்களையும் அனுபவித்தார். இவர் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் மேய்ப்பனாகவே இருந்து வந்தார். அவர் அபிஷேகம் பண்ணப்பட்டதற்கும் அரியணை ஏறியதற்கும் இடையே 30 வருடங்கள் கடந்திருக்கலாம் என்பது சிலரின் கணிப்பாகும்.

அவர் அநேக தடைகளைச் சந்திக்க வேண்டிய ஒரு நிலை காணப்பட்டது! ஆண்டவர் அவரை அழைத்ததுபோல் தாவீது இன்னும் மாறவில்லை என்றாலும், அவர் தனது பழைய பணியைச் செய்துவந்தார். தெய்வீக திட்டம் அவர் மூலம் நிறைவேறியது.

ஏன் அப்படி தடை ஏற்பட்டது? இந்த வசனத்தில் அதற்கான ஒரு காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அதில், "தேவனாலே" என்ற ஒரு வார்த்தை காணப்படுகிறதை நான் பார்க்கிறேன். தாவீது ஆண்டவர் இல்லாமல் தானாக எதுவும் செய்யவில்லை. எல்லாவற்றையும் ஆண்டவருடன் இணைந்து செய்ய வேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார். "தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்" (சங்கீதம் 108:13) என்று தாவீது மீண்டும் கூறுகிறார். 

“உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” என்று வசனம் கூறுகிறது. அவருடன் இணைந்து செயல்பட வேண்டும், அவர் இல்லாமல் எதுவும் செய்யக் கூடாது! தாவீது ஆண்டவரோடு தொடர்ந்து நேரத்தைச் செலவழித்தார். அவர் தன் முழு இருதயத்தோடும் ஆண்டவருடைய தெய்வீக சமூகத்தைத் தேடினார்.

ஆண்டவருடன் நெருக்கமான, ஆழமான மற்றும் உண்மையான உறவில் உள்ள வல்லமையை விட உன் வாழ்க்கையில் வேறு எதுவும் அதற்கு இணையான ஒன்றாக இருக்க முடியாது. உன் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழத் துவங்குவதற்கான முதல் திறவுகோலை நான் ஒரே சொற்றொடரில் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், அது இதுதான்: ஆண்டவருடன் இணைந்திரு, ஆண்டவரை விட்டுவிட்டு தனியாக செயல்படாதே!"

அன்பரே, உன் திட்டங்களும், உன் முயற்சிகளும் மற்றும் நீ எடுக்கும் எல்லா முடிவுகளும் ஆண்டவரது சித்தத்திற்கேற்ப அமையும்படி அவரை உன் வாழ்வில் அழைக்குமாறு இன்று நான் உன்னை ஊக்குவிக்கிறேன்.

உன் வேலையிலும், உன் வீட்டிலும், உன் எல்லா செயல்களிலும், மிகச் சாதாரணமானவற்றிலும் கூட ஆண்டவர் முன்னின்று நடத்தும்படி அவரை அழைக்கவும். ஆண்டவருடன் இணைந்திரு, ஆண்டவர் இல்லாமல் தனியாக இராதே... தடைகள் மாறவும் விடுதலையை அனுபவிக்கவும், ஆண்டவருடன் இணைந்திரு, ஆண்டவரின்றி தனியாக வாழாதே!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையினால் விரக்தியில் மூழ்கிப்போகாமல் காப்பாற்றப்படும் ஒரு காலகட்டத்தில் நான் இருக்கிறேன். 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலை தினமும் வாசிக்கிறேன் அல்லது நான் வேலைக்குச் செல்லும்போது அதைக் கேட்கிறேன். அது பெரும்பாலும் என் தேவைகளைப் பற்றி நேரடியாகப் பேசி எனக்கு ஊக்கத்தையும் ஆறுதலையும் பலத்தையும் அளிக்கிறது. கிறிஸ்து இயேசுவின் ராஜ்யத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் செய்யும் அனைத்திற்காகவும் நன்றி சொல்கிறேன்.” (கிறிஸ்டி, மேகாலயா)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.