போதுமென்கிற மனதுடனும் திருப்தியுடனும் இரு!
அதன் போக்கைப் பின்பற்றிச் செல்லும்படி தொடர்ந்து நம்மை உந்தித்தள்ளும் ஒரு நுகர்வோர் சமூகத்தில் நாம் வாழ்கிறோம். ஆனாலும், புதிதாக வெளிவந்த ஸ்மார்ட்போன், வீடு அல்லது கார் போன்றவை நம் இருதயத்தின் ஆழமான தேவைகளைப் பூர்த்தி செய்யுமா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை... அவற்றை நாம் வைத்திருந்தாலும் கூட, நம்மால் சந்தோஷமாக இருக்க முடியுமா? நாம் சம்பாதிக்கும் பொருள்களில்தான் நமக்கு சந்தோஷம் கிடைக்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம் இருதயம் அதைவிடப் பெரியதும், மிகவும் மகத்துவமானதுமான ஒன்றுக்காக தாகமாய் இருக்கிறது. அதாவது, இயேசுவின் மீது தாகமாய் இருக்கிறது. அவரால் மட்டுமே நமது தேவைகளை நிறைவேற்ற முடியும். நாம் இயேசு கிறிஸ்துவில் பரிபூரணமானவர்களாய் இருக்கிறோம்! (வேதாகமத்தில் கொலோசெயர் 2:10ஐப் பார்க்கவும்)
"... நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்" என்று அப்போஸ்தலனாகிய பவுல் நமக்குச் சொல்கிறான் (பிலிப்பியர் 4:11) மற்றுமொரு வேதாகமப் பதிப்பு கூறுகிறது, “... நான் திருப்தியாகவும், மனரம்மியத்துடனும் இருக்கக் கற்றுக்கொண்டேன் [மற்றும் கிறிஸ்து மூலம் தன்னிறைவு பெற்று, என் சூழ்நிலையை எண்ணி நான் கலக்கமோ அல்லது பதற்றமோ அடையாத அளவுக்கு, திருப்தி அடைகிறேன்]."
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தான் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் எவ்வாறு அடைவது என்பது பவுலுக்குத் தெரிந்திருந்தது. இன்னும் இது எனக்குக் கிடைக்கவில்லையே என்றோ அல்லது இது எனக்குக் கிடைத்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்றோ அவர் கவலைப்படவில்லை.
இப்போது உன்னிடத்தில் என்ன இருக்கிறதோ, அவற்றைப் பார்த்து உன்னால் திருப்தியடைய முடியுமா?
வேதாகமம் எபிரேயர் 13:5ல் மீண்டும் இவ்வாறு வலியுறுத்துகிறது, “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.”
அன்பரே, ஆண்டவர் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டார். அவரே உன் ஆத்துமாவின் ஒவ்வொரு தேவைகளையும், இப்போதும் எப்போதும் நிறைவேற்றுபவராய் இருக்கிறார்!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “அவர் என்னை பெலப்படுத்துகிறார். அவருடைய இரக்கமும் கிருபையும்தான் அனுதினமும் எனக்கு உணவையும், என் சரீரத்துக்கு உடைகளையும், நான் தங்குவதற்கு இடத்தையும் வழங்குகிறது. அவரது கிருபைதான் என்னை ஒரு நல்ல வேலையில் அமரச் செய்திருக்கிறது. ஆமென், அல்லேலூயா, நன்றி இயேசுவே." (எஸ்தர்)
