• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 19 அக்டோபர் 2023

அன்பரே, புயல்களை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

வெளியீட்டு தேதி 19 அக்டோபர் 2023

இந்தப் பூமியில், ஒரு விசுவாசியின் வாழ்க்கையானது ஒரு பயணமாகவும், ஒரு புனித யாத்திரையாகவும் இருக்கிறது. சில நேரங்களில் பாதை விசாலமாகவும் தெளிவாகவும் காணப்படுகிறது, ஆனால் வேறு சில நேரங்களில் வானங்கள் மந்தாரமாகவும் அச்சுறுத்தும் வண்ணமாகவும் இருக்கிறது. இயேசுவின் சீஷர்கள் கோர புயலின் மத்தியில்  சிக்கிக்கொண்டு படகில் தத்தளித்தபோது நடந்த சம்பவத்தை, லூக்கா 8வது அத்தியாயம் விவரிக்கிறது‌. "அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்து போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டாயிற்று." (வேதாகமத்தில் லூக்கா 8:24ஐ வாசித்துப் பார்க்கவும்)

இயேசு அந்தப் படகில்தான் இருந்தார்… ஆனாலும், புயல் வந்தது.

இயேசு உன் வாழ்க்கையில் இருந்தாலும், நீ கடினமான நேரங்களை எதிர்கொள்வாய் என்பதுதான் உண்மை.

உன் புயலின் பெயர் என்ன? விவாகரத்து அச்சுறுத்தலா? நோயா? மனச்சோர்வா? வேலையின்மையா? தோல்வி பயமா?

உன் புயலின் பெயர் எனக்குத் தெரியாது, ஆனால், அதன் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியும்... நீ தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்! உன் வாழ்க்கையில் தற்போது என்ன நடந்துகொண்டிருந்தாலும் சரி, கர்த்தரின் நாமம் உயர்த்தப்பட வேண்டும் என்பது மட்டுமே அதன் நோக்கமாகும்.

  • உன் புயல் "வியாதி" என்று அறியப்பட்டால், உன் தேவனே உனக்கு ஆரோக்கியத்தை மீட்டுத் தருபவராய் இருக்கிறார். (யாத்திராகமம் 15:26
  • அதன் பெயர் "பற்றாக்குறை" அல்லது "தேவை" என்று அறியப்பட்டால், உன் தேவன்  உனக்குத் தேவையானவற்றை வழங்கி உன்னை ஆதரிப்பவராய் இருக்கிறார். (ஆதியாகமம் 22:14
  • அது "பொய்யான குற்றச்சாட்டு" என்று அறியப்பட்டால், உன் தேவன் உனக்கு நீதிசெய்கிறவராக இருக்கிறார். (லூக்கா 18:7-8)  

இவைமட்டுமின்றி வேறு எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அவர்தான் உன் எல்லாத் தேவைகளுக்கும் பதிலாகவும், எல்லா நேரங்களிலும் உன்னை முற்றிலும் பாதுகாப்பவராகவும் இருக்கிறார் என்பதை என்னால் தொடர்ந்து உறுதியாகச் சொல்ல முடியும். இதனால்தான் நீ புயலில் மரிக்க மாட்டாய். மாறாக, இயேசு அதற்கு எதிராக எழும்பி, அந்தப் புயலை அமர்த்தி அதற்கு ஒரு முடிவுண்டாக்குவதை நீ காண்பாய்.  

இன்று, சங்கீதத்திலிருந்து இந்த அற்புதமான வசனத்தை நான் உன் வாழ்க்கையில் அறிக்கையிடுகிறேன்...  அன்பரே, நீ சாவாமல்... பிழைத்திருந்து கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பாய்! (சங்கீதம் 118:17)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.