பரிசுத்தவான்களாக மாறுவது எப்படி?
இணையத்தில் உனக்குப் பிடித்த பொழுதுபோக்கு எது? நீ ஆன்லைன் கேம்களை விளையாடுகிறாயா அல்லது நிறைய ரீல்ஸ் பார்ப்பதற்காக முடிவில்லாமல் மொபைல் திரையை மேல்நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறாயா? உணவுப் பிரியர்கள் என்ற முறையில், நாம் தொடர்ந்து சமையல் வீடியோக்களையும் உணவகப் பரிந்துரைகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கிறோம் 🤤.
தினசரி மின்னஞ்சல்கள் 😉அல்லது முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் ஸ்பாட்டிஃபை போன்ற தளங்களில் நற்செய்தியைப் பரப்புவதற்கான அற்புதமான வழிகளை இணையதளம் நமக்கு வழங்குகிறது. ஆயினும்கூட, அதன் பரந்துவிரிந்த தளம் நம்மை மனிதர்களிடமிருந்து தனிமைப்படுத்துவதாக நாம் உணரலாம். வேதாகமத்தில் ரோமர் 12:2ல் சொல்லப்பட்டுள்ள ஆவிக்குரிய வளர்ச்சியையோ அல்லது நம் மனதில் புதிதாகுதலையோ நாம் அனுபவிக்க முடியாமல் போகலாம்.
யதார்த்த வாழ்வில் நம்மோடு கூட இருக்கும் ஒரு சமூகம் நமக்குத் தேவை — நம்மை கிறிஸ்துவுக்குள் வளர்க்க உதவுகிற, தொடர்ந்து இயேசுவுக்கு நேராக நம்மை வழி நடத்துகிற ஒரு கூட்ட மக்கள் நமக்கு மிகவும் அவசியம்.
"மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து: சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்" என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம் (எபிரேயர் 10:24-25)
இந்த மின்னஞ்சல்கள் ஒருவழி தகவல்தொடர்பு அல்ல. 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலுக்குப் பின்னால் ஒரு அர்ப்பணிப்புள்ள குழுவினர், ஒரு குடும்பம், உன் வாழ்வின் சம்பவங்களைக் கேட்கவும், உனக்காக ஜெபிக்கவும், உன் விசுவாசப் பயணத்தில் உனக்கு உதவவும் ஆவலாய் உள்ளனர்.
கற்றுக்கொள்ளவும், கிறிஸ்துவில் வளரவும், ஒவ்வொரு நாளும் இயேசுவைப்போல் மாறவும் முயற்சி செய்யும் பாதையில் நாம் அனைவரும் ஒன்றாகப் பயணம் செய்கிறோம் .
"நம் சமூகம் ஏற்கனவே பரிசுத்தவான்களால் நிரம்பிய ஒரு சமூகம் அல்ல, மாறாக பரிசுத்தவான்களாக மாற முயற்சிப்பவர்களால் ஆன ஒரு சமூகம் என்பதை நினைவில்கொள்." – அன்னை தெரசா
அன்பரே, எங்கள் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கத் தயங்க வேண்டாம், எந்த நேரத்திலும் நீ பதிலளிக்கலாம். இந்த மின்னஞ்சல்களை ஊக்கம் தேவைப்படக்கூடிய மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள், இந்த அற்புதமான ஆன்லைன் சமூகத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்துமாறு நாங்கள் உன்னை ஊக்குவிக்கிறோம் 🤗
