பரிசுத்த ஆவியானவர் உன்னை மறுரூபமாக்க விரும்புகிறார்!
பரிசுத்த ஆவியானவர் உன்னை மறுரூபமாக்க விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? வேதாகமம் கூறுகிறது, "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." (ரோமர் 12:2)
"மறுரூபமாக்கப்படுதல்" என்ற வார்த்தையின் கிரேக்க பதமான "மெட்டாமோர்பூ" என்பது "மெட்டமோர்போசிஸ்" (metamorphosis) என்ற ஆங்கில வார்த்தையின் மூல வார்த்தை ஆகும். அன்பரே, பரிசுத்த ஆவியானவரால் உன்னை "மறுருபமாக்க" முடியும்; அவர் உன்னை மறுருபமாக்க விரும்புகிறார். வேறுவிதமாகக் கூற வேண்டுமானால், உன்னை வல்லமை வாய்ந்த விதத்தில் மாற்றியமைக்க விரும்புகிறார்!
நீ ஆண்டவருடைய வார்த்தையைத் தியானிக்கும்போது, உதாரணமாக, ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் மூலமாக, நீ ஜெபிக்கும்போதும், ஆண்டவரைத் துதித்துப் பாடும்போதும், பரிசுத்த ஆவியானவர் உன் வாழ்க்கையில் கிரியை செய்யவும் அசைவாடவும் தொடங்குகிறார்.
உன் மனதைப் புதுப்பிக்க நீ அவருக்கு இடமளித்தால், அசாதாரணமான விஷயங்களைப் பார்ப்பாய் மற்றும் அனுபவிப்பாய்!
எனது சிறந்த நண்பர்களில் ஒருவரும், ஒரு திருச்சபையின் போதகருமான பால் கூறுகிறார், “பரிசுத்த ஆவியானவர் முதலில் உன் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவார், உனது மனம் உன் உணர்ச்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும், உன் உணர்ச்சிகள் உன் விருப்பங்களை மாற்றியமைக்கும், உனது விருப்பத் தேர்வுகள் உன் செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும், உன் செயல்கள் உன் எதிர்காலத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறது." இவ்வாறான சகல கிரியையும் தேவ ஆவியானவரிடமிருந்தே தொடங்குகிறது! வேதாகமத்திலும், ஆதியாகமம் 1ம் அத்தியாயத்தில் இதை நாம் பார்க்க முடியும். (ஆதியாகமம் 1 :2)
அன்பரே, இன்று உனது மனதைத் தொடும்படி நீ பரிசுத்த ஆவியானவரிடம் கேள். உன்னோடு பேசுமாறு அவரிடம் மன்றாடு. அவர் உன்னை முழுவதுமாக மறுரூபமாக்குவார். உன்னை முற்றிலும் "உருமாறச்” செய்வார்!
