• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 31 மே 2023

பரலோகத்தின் ஆற்றல்மிக்க பானத்தை நீ ருசித்திருக்கிறாயா?

வெளியீட்டு தேதி 31 மே 2023

"கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்" (சங்கீதம் 34:8) என்று வேதாகமம் நம்மை ஊக்குவிக்கிறது. 

"நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது" (மத்தேயு 26:26) என்று இயேசு சொன்னார். 

இந்த வசனங்கள் வித்தியாசமாகத் தோன்றினாலும், உன் வாழ்க்கையை என்றென்றைக்கும் மேம்படுத்தக்கூடிய ஆவிக்குரிய உண்மைகள் இதில் உள்ளன.

நான் வாரத்தில் பல நாட்கள் உடற் பயிற்சி செய்கிறேன். ஆரோக்கியம் எனக்கு மிக முக்கியமான ஒன்று, ஆனால் என்னை மிகவும் குழப்பும் ஒரு விஷயம் "சத்து பானங்கள்". கோடிகளில் லாபம் பெறும் ஒரு தொழில் துறையாக இது வளர்ந்திருக்கிறது, ஆனாலும் இவை உண்மையிலேயே சக்தி கொடுப்பவையா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. சக்தி பெறுவதற்கு வேறேதேனும் வழி இருக்கிறதா?

அன்பரே, உனக்கு இன்னும் சக்தி வேண்டுமா? ஒரு தொழிலை செய்யவோ அல்லது குடும்பத்தை பராமரிக்கவோ உனக்கு சக்தி தேவையா? அல்லது சோதனையை எதிர்கொள்ள உனக்கு சக்தி வேண்டுமா?

உண்மையாக பார்த்தால், நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் முக்கியமான காரியங்களை செய்து முடிக்க இன்னும் அதிக பெலனையும் சக்தியையும் தேடுகிறோம். அதனால்தான் நான் இயேசுவின் உயிர்த்தெழுதலை நான் விசுவாசிக்கிறேன்.  இயேசு உயிர்தெழுந்த சம்பவம், உயிர்தெழுதலின் சக்தியை (வல்லமையை) பற்றியது.

இயேசு உயிர்தெழுந்தபின் இந்தத் தெளிவான வாக்குதத்தத்தை கொடுத்தார்: "என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்." (லூக்கா 24:49)

அன்பரே, ஆண்டவர் உனக்கு கொடுக்க விரும்பும் 5 விதமான சக்தியை பற்றி உனக்கு தெரியுமா? நீ இதிலிருந்து எதை கேட்பாய்?

  1. Exousia (எக்சூசியா) அனுதின வாழ்க்கைக்கான தெய்வீக அதிகாரம். (வெளிப்படுத்தின விசேஷம் 2:26ஐ பார்க்கவும்)
  2. Dunamis (டூனாமிஸ்) வெடித்தெழும், அதிசயங்களை செய்யும் ஆண்டவரின் வல்லமை. (பிலிப்பியர் 3:10ஐ பார்க்கவும்)
  3. Energia (எனர்ஜியா) ஆண்டவரிடம் இருந்து வரும் ஆற்றல். (யாக்கோபு 5:16ஐ பார்க்கவும்)
  4. Ischuos (இஸ்சுஓஸ்) பெரிய காரியங்களை செய்வதற்கான பெலன். (எபேசியர் 1:19ஐ பார்க்கவும்)
  5. Kratos (க்ராட்டோஸ்) செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. (வெளிப்படுத்தின விசேஷம் 5:13ஐ பார்க்கவும்)

அன்பரே, ஆண்டவர் உன்னை நேசிக்கிறார், உன்னை உயிர்த்தெழுதலின் வல்லமையால் நிரப்பி அதிகாரம் கொடுக்க விரும்புகிறார்.

உண்மையான வல்லமை இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரிடம் இருந்து வருகிறது, கடைகளில் கிடைக்கும் சத்து பானங்களிலிருந்து அல்ல. இந்த உயிர்தெழுதலின் வல்லமை உனக்கு கிடைக்கக்கூடிய ஒன்று.

நீ ஒரு அற்புதம்.

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.