• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 4 ஜூன் 2024

அன்பரே, புறப்பட்டுப்போய் ஆண்டவரின் அன்பைப் பரப்புவாயாக!

வெளியீட்டு தேதி 4 ஜூன் 2024

நான் நேற்று உறுதியளித்தபடி, 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சல் ஊழியம் மூலம் வந்த சாட்சிகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன்.

"உங்களது செய்திகளின் வார்த்தைகள் என் ஆத்துமாவுக்கு ஜீவன் அளிப்பதாய் இருக்கின்றன, நான் பலமுறை துவண்டுபோய் எழுந்திருக்கிறேன், தங்களது வார்த்தைகள் எனக்கு ஊக்கமளித்து, என் இரட்சகரின் இருதயத்திற்கு நேராக என்னை அழைத்துச் செல்கின்றன! நான் ஒரு அடையாளமற்ற நபராகவும் மதிப்பற்ற நபராகவும் கருதப்பட்டு, அதிக அளவில் நிராகரிக்கப்பட்டு போராடிக்கொண்டிருக்கிறேன், ஆனால் 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சல் மூலம், தேவ ஆவியானவர் அந்த எதிர்மறையான விஷயங்களை எல்லாம் மாற்றி நல்ல விஷயங்களை என் உள்ளத்தில் வைக்கிறார்! அவருக்கு செவிசாய்த்ததற்கும், இந்த ஊழியத்தின் மூலம் நான் பெற்றுக்கொண்ட ஜீவனுக்காக உங்களுக்கு நன்றி!” (சோனியா)

"நான் முற்றிலும் மனமுடைந்துபோய், என் வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்த ஒரு காலகட்டம் இருந்தது. ஒரு கட்டத்தில் நான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன், ஆனால் 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சல் மூலம் நான் ஊக்கத்தைப் பெற்று, என் நிலைமை மாறும் என்று நம்புகிறேன். ஆவிக்குரிய வளர்ச்சியும் சுயமரியாதையும் எனக்குத் திரும்பி வந்தது.  நீங்கள் என் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றிவிட்டீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்பினேன்." (பெர்சியா)

“ஆரம்பத்தில், மூன்று மாதங்களுக்கு முன்பு, உங்களது செய்தியின் உள்ளடக்கம் என் வாழ்க்கையில் நடப்பதை அப்படியே சொல்வது தற்செயலானது என்று நினைத்தேன். பின்னர்தான் நான் உணர்ந்தேன், அறிந்துகொண்டேன், ஒவ்வொரு செய்தியிலும் அவரது அன்பை உணர்ந்தேன், அவர் என்னுடன் நேரடியாகப் பேசிக்கொண்டிருந்ததார். நான் அவருடைய நேசத்துக்குரிய பிள்ளை, நான் தகுதியானவள், என்னை நான் நேசிப்பது போலவே அவர் என்னை நேசிக்கிறார் என்பதை நான் உணர்கிறேன், உங்களது செய்திகளிலிருந்து நான் பெறும் ஊக்கம் என்னை முன்னோக்கிச் சுமந்து செல்கிறது மற்றும் அந்தச் செய்திகள் விலைமதிப்பற்றவை என்பதை நான் இப்போது உணர்கிறேன்." (மேரி)

"நான் முதலில் 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலைப் பெறத் தொடங்கியபோது, என் வாழ்க்கையில் நான் மிகவும் வளர்ச்சியின்றி இருந்தேன். தற்கொலை செய்து நரகத்திற்குச் சென்றுவிட்டால், கர்த்தருக்குப் பயந்து வாழ்ந்த ஒரு நபராக இருக்க முடியாது என்று ‌நான் நினைத்த நேரங்கள் உள்ளன. அவ்வாறு நான் செய்யமாட்டேன் என முடிவெடுத்தேன். 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலில் இப்படிப்பட்ட அற்புதமான செய்திகளைப் பெற ஆரம்பித்தேன்‌. மேலும் அவை ஆண்டவரிடத்துக்கு நெருங்கி வரவும் அவரில் வளரவும், அவருடைய வார்த்தைக்கு நேராகத் திரும்பவும் எனக்கு உதவியது. மேலும் நாளுக்குநாள் நான் ஆவிக்குரிய ரீதியாகவும் மனரீதியாகவும் முன்னேற ஆரம்பித்தேன். எனக்குக் கிடைத்த இந்த அற்புதத்தை மற்றவர்களுக்கும் பரிசாக அளிக்க வேண்டும் என்று எண்ணி, நான் பலருக்கும் இதை அனுப்பினேன். என் வாழ்க்கை இப்போது மிகவும் சிறப்பாக உள்ளது, என் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது மற்றும் என் எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கிறது. இந்த அற்புதமான ஆசீர்வாதத்தை எனக்கு அளித்ததற்கு நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது! ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக."  (எல்சா)

முதலாவதாக ஆண்டவரை மகிமைப்படுத்தும்படி இந்தச் சாட்சிகளைப் பகிர்ந்துகொள்கிறேன், அதோடு கூட உன்னை ஊக்குவிப்பதற்காகவும், வெளிப்படையாகப் பேச முடியாத ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் மற்றவர்களையும் உன் குடும்பத்தினரையும் உன் நண்பர்களையும் ஊக்குவிப்பதற்காகவும் இதைப் பகிர்ந்துகொள்கிறேன். ஆண்டவர் அவர்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை அல்லது அவர்களின் வாழ்க்கை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை ஒருவேளை அவர்கள் இன்னும் அறியாமல் இருக்கலாம்.

இன்று நீ முழுமனதோடு நேசிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? ஊக்குவிக்கும்படி நீ ஒரு நபரைத் தேர்ந்தெடு.  அந்த நபருக்கு அன்பு மற்றும் பாராட்டை தெரிவிக்கும் ஒரு செய்தியை (உரை, மின்னஞ்சல், வாட்ஸ்அப், மெசஞ்சர், நீ விரும்பும் வழிகளில்) அனுப்பவும்.

உதாரணமாக, நீ எழுதலாம், "இயேசுவின் பார்வையில் நீ அதிக விலையேறப்பெற்றவன்/ விலையேறப்பெற்றவள். உன் வாழ்க்கை விலையேறப்பெற்றது, மதிப்புமிக்கது! நீ தகுதியானவன்/ தகுதியானவள்... நீ அதற்குத் தகுதியான நபர். அதை இன்று நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். உன் வாழ்விற்காய் நன்றி, [உன் நண்பனின்/ தோழியின் பெயர்]!"

சில நேரங்களில், வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்ற ஒரு சில வார்த்தைகள் மட்டுமே தேவைப்படுகிறது.

அன்பரே, இன்று புறப்பட்டுப்போய் ஆண்டவருடைய அன்பைப் பரப்பு!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.