• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 19 நவம்பர் 2024

ராஜாவோடு விருந்துண்ண நீ அழைக்கப்படுகிறாய்

வெளியீட்டு தேதி 19 நவம்பர் 2024

வலிமிகுந்த சூழ்நிலைகளை நீ எதிர்கொள்ளும்போது, சில சமயங்களில் ஆண்டவருடைய அன்பை அல்லது பிரசன்னத்தை நீ சந்தேகிக்கிறாயா? இருப்பினும், வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது: “பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்." (எபேசியர் 1:5-6

'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சல் வாசகர் ஒருவர் இவ்வாறு கூறியிருக்கிறார்: “நான் ஆவிக்குரிய கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருந்தேன். நான் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் ஆண்டவரிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதாக உணர்ந்தேன், மற்றும் குற்ற உணர்ச்சியில் வாழ்ந்துகொண்டிருந்தேன். ஒரு நாள் காலையில், 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலை வாசித்தேன். பிறகு, ஆண்டவருடைய பார்வையில் நான் முக்கியமானவன், மிகவும் மதிப்புமிக்கவன், நான் இருக்கிற வண்ணமாகவே அவர் என்னை நேசித்தார், அவர் எனக்குச் சிறந்ததையே விரும்பினார். நான் விசுவாசத்துடன் இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்."

இந்த வாசகர் சொன்னதைப்போலவே, ஆண்டவருடைய பிள்ளைகள் அனைவரும், விதிவிலக்கு இல்லாமல், தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது கொந்தளிப்பு, குழப்பம் மற்றும் சந்தேகங்களை அனுபவித்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அன்பரே, உன் விசுவாசத்தை அசைக்கக் கூடிய சிரமங்கள் மத்தியில், ஆண்டவர் உன் இதயத்தில் ஒரு ஆழமான உண்மையை நங்கூரமிட விரும்புகிறார்.

அவருக்குள் உன் அடையாளத்தை உறுதிப்படுத்த இன்றுதான் சரியான நேரம். தன் ஜீவனைப் பணயம் வைத்து உன்னை அன்பினால் தத்தெடுத்தார்! விசுவாசத்தோடு இதை நீ அறிக்கையிடுவாயாக:

  • நான் ஆண்டவருடைய குமாரன்/குமாரத்தி.  (2 கொரிந்தியர் 6:18)
  • அண்ட சராசரத்தையும் தன் கரங்களில் ஏந்திக்கொண்டு, நித்திய சிங்காசனத்தில் வீற்றிருப்பவரின் வாரிசு நான். (ரோமர் 8:17)
  • ஆண்டவருடைய தெய்வீக சுபாவத்தில் எனக்குப் பங்கு இருக்கிறது. (2 பேதுரு 1:4)

ஆண்டவர் உன்னை முன்குறித்தார், தத்தெடுத்தார் மற்றும் உன்னை நேசித்தார். இது உனக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், இதைத் தியானிப்பதும், அறிக்கையிடுவதும் நல்லது: ராஜாவின் பிள்ளைகள் ராஜாவோடு பந்தியில் அமர்கிறார்கள்... ராஜாவின் பிள்ளைகளால் மட்டுமே அப்படிச் செய்ய முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிறந்த உணவுகள், சிறந்த பண்டங்கள் மற்றும் அதிக சுவையுள்ள பதார்த்தங்களை ருசிப்பதற்கான தகுதி உனக்கு மட்டுமே உண்டு!

அன்பரே, நீ அவருடைய பிள்ளையாக இருப்பதால், அவருடைய சிங்காசனத்திற்கு அருகில் செல்லவும், அவருடைய பந்தியில் அமரவும் மற்றும் அவரது இதயத்திற்கு அருகில் நெருங்கிச் செல்லவும் உனக்கு உரிமை இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ராஜாதி ராஜாவுடன் அவருக்கு இணையாக அமரும் பாக்கியம் உனக்கு உள்ளது. மேலும் அவருடைய பிரசன்னத்தை விட அற்புதமானதோ அல்லது அதிசயமானதோ எதுவும் இல்லை. ஆண்டவரில், நீ அவருடைய பிள்ளையாக இருப்பதால், நீ பரிபூரண அன்பையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சமாதானத்தையும் காண்பாய். 

இன்று, ஆண்டவர் தம்மிடம் நெருங்கி வர உன்னை அழைக்கிறார். அவர் எவ்வளவு நல்லவர் என்பதை ருசித்துப் பார்! வா... இன்னும் நெருங்கி வந்து, அவரது சுகந்த வாசனையை முகர்ந்துபார்; அவருடைய இதயத்துடிப்பைக் கவனி. பந்தி ஆயத்தமாக்கப்பட்டுள்ளது. அவர் உனக்காகத்தான் காத்திருக்கிறார்.

நீ எத்தனை முறை வேண்டுமானாலும் பந்தியில் அமரலாம்! சிறந்த உணவுகளுடன் உன்னை வரவேற்க ஆண்டவர் எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார்.

உன் உணவை ருசித்து சாப்பிடு!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.