• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 10 செப்டெம்பர் 2023

அன்பரே, விசுவாசம் வலிமையானது!

வெளியீட்டு தேதி 10 செப்டெம்பர் 2023

உன் இருதயம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்கிறது, அதன்மூலம் உன் உடல் முழுவதும் ஆக்சிஜனைத் தடையின்றி சுழற்சி செய்ய வைக்கவும், மற்றும் உன் உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் போஷாக்கு அளிக்கவும் உதவுகிறது. இந்த ஆச்சரியமான கருவியானது ஒரு மகத்தான பணியை ஒருபோதும் நிறுத்திவிடாமல் செய்து (அதிர்ஷ்டவசமாக!), நாம் ஜீவனோடு இருக்க உதவுகிறது.

ஆண்டவருடைய இந்த ஆச்சரியமான சிருஷ்டிப்பு மிகவும் விசேஷமான ஒன்று அல்லவா? வாழ்க்கையின் இயக்கப்பொருட்களுள் இருதயம் ஒரு மைய உறுப்பாகும். கிறிஸ்தவர்களாகிய நம் வாழ்விலும் மூலாதாரமான உந்து சக்தியாக விளங்கும் விசுவாசமும் அவ்வாறுதான், மையப் பொருளாக இருக்கிறது.

“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.” (வேதாகமத்தில் ரோமர் 1:17ஐப் பார்க்கவும்)

உன் இருதயம் நின்றுவிட்டால் உன்னால் தொடர்ந்து வாழ முடியாது என்பதுபோல, விசுவாசம் இல்லாமல் கிறிஸ்துவோடு நடப்பது என்பது சாத்தியமற்றதாகும்.

  • விசுவாசத்தினால்தான் இயேசு மரித்து உயிர்த்தெழுந்தார் என்று நீ நம்புகிறாய்.
  • விசுவாசத்தினால்தான், தேவன் உனக்கு அளித்த வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்கிறாய்.
  • விசுவாசத்தினால்தான், உன் சூழ்நிலைகள் மீது கவனம் செலுத்துவதைக் காட்டிலும், தேவன் மீது கவனம் செலுத்துவதை நீ தெரிந்துகொள்கிறாய்.

நீ எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையும், உன் விசுவாசம் மென்மேலும் வளரவும்,  தசையைப்போல அதிக பலமுள்ளதாக மாறவும் உதவுகிறது.

விசுவாசத்தைப் பெருகச் செய்யும் பாடல்களைக் கேட்கும்படி நான் உன்னை ஊக்குவிக்கிறேன் ...

அன்பரே,  இன்றைய தினமும் மற்ற நாட்களைப் போலவே, வேறு எந்த மாற்றமும் இல்லாமல், அதே மாதிரியான சவால்களை நீ மேற்கொள்ள வேண்டி இருக்கலாம். இருப்பினும், இது உன் விசுவாசத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமையலாம்!

என்னுடன் சேர்ந்து ஜெபி… “கர்த்தாவே, என் சரீரப்பிரகாரமான கண்கள் பார்க்கும் விஷயங்களைத் தாண்டி நான் உம்மை விசுவாசிக்கிறேன். நீர் நல்லவர் என்றும், நான் கடந்து செல்லும் எல்லா காரியங்களின் மூலமாகவும் ஒவ்வொரு நொடியும் என் விசுவாசத்தை நீர் பலப்படுத்துகிறீர் என்றும் நான் நம்புகிறேன். உமது பிரசன்னத்திற்காகவும், உமது கிருபைக்காகவும், ஒருபோதும் மாறாத உமது அன்பின் இருதயத்திற்காகவும் நன்றி செலுத்துகிறேன். உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

சாட்சி: “நான் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலைப் பெற்றுக்கொள்ளத் துவங்கியதிலிருந்து, என் முழு நம்பிக்கையையும் தேவன் மீது வைக்க முடிவு செய்ததால், என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. எனது பொருளாதார நிலைமையைக் குறித்து முன்பு எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன; மாதக் கடைசியில் போதிய பணம் இல்லாமல் போய்விடுகிறதே என்ற பயம் எனக்கு எப்போதும் இருந்து வந்தது... ஆனால் இப்போது என் சந்தேகங்களும் பயங்களும் காணாமல்போய்விட்டன, ஏனென்றால் ஆண்டவர் என் எல்லா தேவைகளையும் எப்போதும் சந்திப்பார் என்பதை நான் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். (சரியான) விசுவாசத்துடன் ஜெபிக்கக் கற்றுக்கொடுத்ததற்காக ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்." (லீலா)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.