• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 20 செப்டெம்பர் 2024

விட்டு விலகி ஓடாதே! 💪

வெளியீட்டு தேதி 20 செப்டெம்பர் 2024

இதை நீ எப்போதாவது கவனித்திருக்கிறாயா? சிரமத்தை நீ எதிர்கொள்ளும்போது, நமக்கு முதல் வரிசையில் நிற்பது விரக்திதான்.

உண்மையிலேயே நீ பேசுவதைக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அவ்வேளையில், உன் துணைவியார்/ கணவர் ஏன் அலைபேசியைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு உன்னைக் கவனிப்பதற்கு மறுக்கிறார் என்பது உனக்குப் புரியாமல் இருக்கலாம். எல்லா வேலைகளையும் சரியாகச் செய்ய அனைத்து வாய்ப்புகளும் இருந்தாலும், நமது சக பணியாளர்கள் ஏன் அவற்றை நேர்த்தியாய் செய்வதில்லை, ஏன் நமது போதகருக்கு நம் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று தோன்றவில்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

எனவே, எதிர்த்து நிற்பதா அல்லது எல்லாவற்றையும் விட்டு ஓடி விடுவதா என்று சொல்லி நாம் குழப்பமடையலாம். நாமோ விட்டு விலகியோடுவதையே தேர்வு செய்கிறோம்.

ஆகவேதான் நாம் பின்வருவனவற்றை மாற்றிக்கொள்கிறோம்:

  • திருச்சபைகள்,
  • வாழ்க்கைத் துணை,
  • வேலைகள்,
  • அண்டை அயலகத்தார், 
  • நண்பர்கள்,
  • மற்றும் பல சூழல்.

ஆனாலும் அவ்வப்போது, உனக்கு சிரமங்கள் ஏற்படக்கூடும். நீ அவற்றை சந்திக்க விரும்பாமல் இருக்கலாம். உன் கண்களை மூடிக்கொள்ளலாம்.

இருப்பினும், அவைகளை விட்டு விலகி ஓடுவதை விட்டுவிட்டு, இந்த சிரமங்களின் மத்தியிலும் நீ மகிழ்ச்சியைக் காணவும், அதில் பிரியப்படவும் வேண்டும் என்று ஆண்டவர் உனக்கு அறிவுறுத்துகிறார்!

“அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." (2கொரிந்தியர் 12:10)

ஏன் பிரியப்பட வேண்டும்? ஏனெனில் இந்தச் சிரமங்கள் எப்போதும் உனக்கு ஒரு செய்தியைக் கொண்டிருக்கும்.

அன்பரே, உனக்கான ஆண்டவருடைய செய்தி என்ன?

உன் பிதா, உனக்காக ஏற்கனவே எல்லாவற்றையும் நிறைவேற்றியிருப்பதால், நீ அவருடைய வெற்றியில் நடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவருடைய கிருபை ஒன்றே உனக்குப் போதும். மன்னிப்பதன் மூலம் உன் கசப்பை நீ மாற்றிக்கொள்ளலாம்; உன்னால் கூடாதது அவரால் நிச்சயம் கூடும். ஒருவேளை நீ விட்டுக்கொடுப்பதில் வளர வேண்டுமா? உன் முன்னுரிமைகளை சரிபார்க்க வேண்டுமா? அல்லது ஒருவேளை சிறந்த முறையில் பேசக் கற்றுக்கொள்ள வேண்டுமா? இவற்றைச் செய்ய அவர் உனக்கு உதவுவார்.

இத்தகைய அன்புடன் ஆண்டவர் இந்த நம்பிக்கை நிறைந்த செய்தியை உனக்கு அனுப்புகிறார்: "நீ இருக்கிற வண்ணமாகவே உன்னை நான் நேசிக்கிறேன்; நான் உன்னை மிகவும் நேசிப்பதால், இந்த இடத்தில் இப்படியே உன்னை விட்டுச் செல்லமாட்டேன். என்னால் உன்னை இன்னும் அதிகமாக உயர்த்த முடியும். நீ கவலையை விட்டுவிடு. உன் பெலவீனங்களில் என் கிருபை வல்லமையாக வெளிப்படும். நான் உன்னுடனே கூட இருக்கிறேன்! பயப்படாதே."

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.