• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 25 டிசம்பர் 2023

விடுதலையைக் கொண்டுவரும் ஒரு விடுமுறை

வெளியீட்டு தேதி 25 டிசம்பர் 2023

“தூய இரவில் நட்சத்திரங்கள் மின்னும்.

இரவினில் நம் ரட்சகர் பிறந்தார். 

பாவத்திலே வீழ்ந்திருந்ததே 

இவ்வுலகம் இரட்சகர் வரும்வரை

நல்நம்பிக்கையில் களிகூருவோமே! 

அதோ தோன்றுதே விடியுங்காலையே 

தாளிடுங்கள்! கேட்பீர் தூதர் கானம்!

ஓ தூய இரா, நம்மீட்பர் பிறந்தார்!

தெய்வீக இரா, ஓ தூய இரா!”

இந்தப் பாடலைக் கேட்டு நம் ஆண்டவரைத் துதியுங்கள். 

கிறிஸ்துமஸ் என்பது, பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கொண்டிருக்கக் கூடிய ஒரு முக்கியமான காலகட்டமாகும், சில நேரங்களில் மிகப்பெரிய ஏமாற்றங்களும் ஏற்படலாம். அப்படிப்பட்ட ஏமாற்றங்களில் சில பின்வருமாறு...

  • விடுமுறை கிடைக்கவில்லை என்றோ அல்லது கொஞ்ச நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது என்றோ  விரக்தியடையலாம்,
  • குடும்ப உறுப்பினர் ஒருவர் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளமாட்டாரே என்ற வருத்தம்,
  • நாம் நேசித்தவர்கள் அந்த ஆண்டில் ஆண்டவரோடு நித்தியத்தில் இளைப்பாறிக் கொண்டிருப்பதால், இழப்பை எண்ணி கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத துயரம்,
  • அல்லது அலங்கரித்தல், உணவு வகைகள், விலைக்கு வாங்க வேண்டிய பொருட்கள் ஆகியவற்றை நினைக்கையில் உண்டாகும் மன அழுத்தம்,
  • அல்லது தனிமை…

உன் சூழ்நிலை எப்படி இருந்தாலும் சரி, இயேசு உன்னைப் புரிந்துகொள்கிறார்! அவர் மூலம், நீ நம்பிக்கையின் ஆச்சரியத்தில் களிகூரலாம்.

கிறிஸ்துமஸ் என்பது விடுதலைக்கான ஒரு விடுமுறை... ஆண்டவர் செயல்பட வேண்டும் என்று நீ எதிர்பார்த்துக் காத்திரு! அவருக்கு முன்பாக நீ முழங்கால்படியிட்டு, உன் மன அழுத்தம், உன் ஏமாற்றம், உன் சோகம், உனது சோர்வு ஆகியவற்றைப் பற்றி அவரிடம் சொல்லு...  அவர் உன்னை ஆறுதல்படுத்தட்டும், உன்னை அமைதிப்படுத்தட்டும், உனக்கு ஆலோசனை வழங்கட்டும், உன்னை நேசிக்கட்டும், உன்னை ஆச்சரியத்தால் திளைக்கவைக்கட்டும்!

“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்." (ஏசாயா 9:6)

உன்னுடைய கிறிஸ்துமஸின் கதை எதுவாக இருந்தாலும் சரி, தெய்வீக சரித்திரம் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது என்பதை மறந்துவிடாதே: நீ தேவனுடைய பிள்ளை, நீ அவருடைய ஆவியால் நிரப்பப்பட்டவன்/நிரப்பப்பட்டவள், உனக்கு இயேசு ஒரு சிநேகிதனாக இருக்கிறார்!

இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உனக்காக நான் ஜெபங்களை ஏறெடுக்கிறேன். எல்லாவற்றிற்கும்  மேலாக, இயேசு உன்னோடு கூட இருக்கிறார்... அவர் இம்மானுவேல், ஆண்டவர் உன்னோடு கூட இருக்கிறார்!  இதோ, என் சார்பாக உனக்கு என் மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

இன்று உன் எதிர்பார்ப்புகள் மற்றும் கற்பனைகள் அனைத்திற்கும் மேலாக நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.