• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 16 ஆகஸ்ட் 2024

விடியற்காலம் உதித்தது… ☀️

வெளியீட்டு தேதி 16 ஆகஸ்ட் 2024

வழக்கமாக நடக்க வேண்டிய நிகழ்வுகள் பற்றிய கருத்தைத் தூண்டுவதற்கு வேதாகமம் அடிக்கடி விடியற்காலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ஒரு நாளின் காலைப்பொழுது என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது பல நல்ல பழக்கங்களின் தொடக்கப் புள்ளியாகக் காணப்படும். ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நான் என்ன செய்கிறேன் என்பதில் தனிப்பட்ட முறையில் நான் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன்.

காலை நேரம் பற்றி வேதாகமம் குறிப்பிடும் சில பகுதிகள் இங்கே: 

  • “ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, …” (லேவியராகமம் 6:12)
  • "அவர்கள் தினந்தோறும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்த வாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும், மாலையிலும், பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்தப்பங்களை அடுக்கிவைக்கிறதையும், ..." (2 நாளாகமம் 13:11)
  • “அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; …” (ஏசாயா 28:19
  • "காலைதோறும் உங்கள் பலிகளையும்... செலுத்தி" (ஆமோஸ் 4:4)
  • "அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்; ..." (செப்பனியா 3:5)

ஒவ்வொரு நாளும் காலை வேளையானது ஒரு நல்ல பழக்கத்தைக் கடைப்பிடிக்க உனக்கு வாய்ப்பளிக்கிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு காரியத்தைச் செய்ய ஒரு நாள் முழுவதிலும் உன்னால் ஒரு குறிப்பட்ட நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றால், ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது அரை மணி நேரத்துக்கு முன்னதாகவோ எழுந்திருந்து பின்வருவனவற்றை செய்யலாம்:

  • உன்னைக் கவனித்துக்கொள்ள நேரத்தை செலவிடலாம்.
  • ஆண்டவருடன் நேரத்தை செலவிடும்படி வேதாகமத்தை வாசிக்கலாம்.
  • உன் நாளின் காரியங்களை முன்னதாகவே திட்டமிட்டு, கடைசி நிமிடத்தில் அவசரமாக காரியங்களைச் செய்வதால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.
  • உனது நாள்/வாரத்திற்கான உன் எதிர்பார்ப்புகளை எழுதி, நேர்மறையான குறிப்பில் அதைத் தொடங்கலாம்.
  • நீ பயப்படும் ஒரு பணியை தவிர்க்க அந்த நாளை ஒத்திவைப்பதற்குப் பதிலாக, அந்தப் பணியை செய்யத் தொடங்கு (மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பது, அல்ஜீப்ரா வீட்டுப்பாடத்தை செய்யத் தொடங்குவது, கழிப்பறையை சுத்தம் செய்தல்...)

இன்று, அன்பரே, குறிப்பாக, உன் நாளின் தொடக்கத்தில், ஆண்டவருக்குக் கொடுக்கும் நேரத்தை நீ ஒருபோதும் வீணடிக்கவில்லை என்பதை அறிந்துகொள். இது உன் நாள் முழுவதும் உனக்கு மிகவும் பயனுள்ளதாக மாறும். நீ புதுபெலனடைவதற்கும் உனக்குத் தேவையானவற்றைப் பெறுவதற்கும் நேரம் ஒதுக்கு: சமாதானம், உறுதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, பெலன் போன்றவை உனக்குத் தேவை.

ஒவ்வொரு காலைப்பொழுதையும் உன் நாளின் மிகச்சிறந்த சொத்தாக ஆக்கிக்கொள்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: "'அனுதினமும் ஒரு அதிசயம்'  மின்னஞ்சலைத் திறப்பதற்கு முன்பே ஒரு நேர்மறையான மனநிலையை நான் பெறுகிறேன்.  நான் ஊக்கமடைகிறேன், அந்த வார்த்தைகள் நாள் முழுவதும் என்னில் நிலைத்திருக்கிறது. முன்பெல்லாம், நான் இரவும் பகலும் அழுது கண்ணீர்வடித்துக்கொண்டே இருப்பதுண்டு.  ஆனால் இப்பொழுதெல்லாம் அது எவ்வளவு அரிதாய் நடக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது..” (விக்டோரியா, ஊட்டி)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.